விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பிளாக் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடத்த்தை நிரப்புவதற்கு ஓராண்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் தகுதியும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘’திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படையில் ஆஸ்பிரேஷனல் பிளாக் ஃபெலோ பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு தகுதியானவர்கள் வரும் நவம்பர் 15 ந் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கில மொழி தெரிந்திருக்க வேண்டியது அவசியம். தரவு பகுப்பாய்வு பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். திட்ட மேலாண்மை திறன் பெற்றிருக்க வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு, யுபிஎஸ்சி நடத்திய முதல்நிலைத் தேர்வில் அல்லது குரூப் I தேர்வுக்கு டிஎன்பிஎஸ்சி நடத்திய முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்: மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.55,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணபிக்கும் முறை: உரிய இணைப்புகள்/ஆவணங்களுடன் முறையாகச் சான்றொப்பமிடப்பட்ட விண்ணப்பங்கள், கலெக்டர் அலுவலகம், மேம்பாட்டுப் பிரிவு, விருதுநகர் (கீழே உள்ள முகவரி) என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ நவம்பர் 15ம் தேதி மாலை 5.00 மணிக்குள் வந்தடைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு கீழே உள்ளே Pdf கிளிக் செய்யவும்!