தகுதித்தேர்வு முடித்திருக்கும் ஆசிரியர்களுக்குப் போட்டித் தேர்வு எதற்கு? - ஓபிஎஸ் வலியுறுத்தல்

ஓ.பன்னீர் செல்வம்.
ஓ.பன்னீர் செல்வம்.

தகுதித் தேர்வு முடித்த ஆசிரியர்களுக்கு போட்டித் தேர்வு இன்றி பணி நியமனம் செய்ய வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,“திமுகவின் தேர்தல் பிரச்சாரத்தை நம்பி வாக்களித்த ஆசிரியர்களை விடியல் அரசு என்று சொல்லிவிட்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு, விடியலுக்காக காத்திருக்கும் நிலைக்கு தள்ளி உள்ளது. இது கடும் கண்டனத்திற்கு உரியது. ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்திருக்கும் ஆசிரியர்களுக்கு போட்டித் தேர்வு எதற்கு? போட்டித் தேர்வுகள் இன்றி அவர்களை பணிநியமனம் செய்ய வேண்டும்.

மறுநியமன போட்டித் தேர்வுக்கான அரசாணையை ரத்து செய்துவிட்டு காலிப் பணியிடங்களைப் போட்டித் தேர்வு இன்றி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை வைத்து நிரப்ப வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கை. அரசு இதில் கொள்கை முடிவுதான் எடுக்க வேண்டுமே தவிர, இதனால் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை எதுவும் இல்லை. மீண்டும் போட்டித் தேர்வு என்பது திமுகவின் தேர்தல் அறிக்கைக்கும் முரணானது.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in