ராகுல் காந்தியின் உடலுக்குள் ஜின்னாவின் ஆவி நுழைந்து விட்டது: அமெரிக்க பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம்!

முக்தார் அப்பாஸ் நக்வி
முக்தார் அப்பாஸ் நக்வி

அமெரிக்காவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜகவை விமர்சித்து பேசியதற்கு அக்கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டில் இருக்கும்போது ராகுல் காந்தியின் உடலுக்குள் ஜின்னாவின் ஆவி நுழைந்து விடுகிறது என்று பாஜக மூத்த தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.

கலிபோர்னியாவில் நடந்த கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பாஜக தலைமையிலான மத்திய அரசு நாட்டின் ஏஜென்சிகளை துஷ்பிரயோகம் செய்வதாகவும், மக்களை அச்சுறுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த பாஜக தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி, “ராகுல் காந்தி வெளிநாடு செல்லும்போது, ஜின்னாவின் ஆவி அல்லது அல்-காய்தா போன்றவர்களின் சிந்தனை அவரது உடலில் நுழைந்து விடுகிறது. அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து ஒரு நல்ல பேயோட்டும் நபரிடம் பேயோட்டுதல் செய்யுமாறு நான் பரிந்துரைக்கிறேன். ராகுல் காந்தியின் பிரச்சினை என்னவென்றால், தனது வம்சாவளியான நிலப்பிரபுத்துவத்தை எவ்வாறு பிரதமர் மோடி அழித்தார் என்பதை இன்றும் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ” என்று கூறினார்.

மேலும், ராகுல் காந்தி இந்தியாவை இழிவுபடுத்தும் ஒப்பந்தத்தை எடுத்துள்ளார் என்றும், காங்கிரஸ் முஸ்லிம்களை சூயிங்கம் போல பயன்படுத்தியது என்றும் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in