‘உதயநிதி தலைக்கு விலை சரிதான்…’ சனாதன சர்ச்சையில் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கருத்து!

சி.பி.ராதாகிருஷ்ணன்
சி.பி.ராதாகிருஷ்ணன்

’ஆளுநர், அமைச்சர்களை வாடா, போடா என்று சொல்வது சரி என்றால், உதயநிதியின் தலைக்கு விலை வைத்ததும் சரிதான்’ என ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் பட்டமளிப்பு விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி அறிஞர் அண்ணா வழியை பின்பற்றுகிறார் எனக் கூறினார்.

ஏனென்றால், சென்னை மாகாணம் என்று இருந்ததை தமிழ்நாடு என்று அறிஞர் அண்ணா மாற்றியது சரி என்றால், பாரத் என்ற பெயர் மாற்றமும் சரிதான் என்றார். சனாதனம் குறித்து பேசிய அவர், அது இந்து மதத்தின் ஓர் அங்கம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ஒரு ஆளுநரை அமைச்சர்கள் வாடா, போடா என்று சொல்வது சரி என்றால், உதயநிதியின் தலைக்கு சாமியார் விலை வைத்ததும் சரிதான் என்றார். அதனால் யாரும் எப்போதும் மரபை மீறக் கூடாது என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in