கிரிமினல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறை: காங்கிரஸ் எம்எல்ஏ தகுதி நீக்கம்

கிரிமினல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறை: காங்கிரஸ் எம்எல்ஏ தகுதி நீக்கம்

கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்ற ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மம்தா தேவி, மாநில சட்டமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காங்கிரஸுக்கு அம்மாநிலத்தில் மற்றொரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ராம்கர் மாவட்டத்தில் உள்ள கோலாவில் நடந்த வன்முறைப் போராட்டம் தொடர்பான வழக்கில் ஹசாரிபாக் எம்பி மற்றும் எம்எல்ஏ நீதிமன்றம் டிசம்பர் 13 அன்று, மம்தா தேவி மற்றும் 12 பேருக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை வழங்கியதை அடுத்து அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் எம்எல்ஏ மம்தா தேவியின் உறுப்பினர் தகுதி நீக்கம் தொடர்பான அறிவிப்பை ஜார்க்கண்ட் சட்டப்பேரவை நேற்று வெளியிட்டது.

கிரிமினல் வழக்கில் தண்டிக்கப்பட்டு இந்த ஆண்டு சட்டமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட இரண்டாவது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மம்தா தேவி ஆவார். ஏற்கெனவே மார்ச் மாதம், ஜார்க்கண்ட் காங்கிரஸ் செயல் தலைவரும், மாந்தர் எம்எல்ஏவுமான பந்து டிர்கே, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

மம்தா தேவியின் தகுதி நீக்கம் காரணமாக ராம்கர் சட்டசபைக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடத்தும் சூழல் எழுந்துள்ளது. சமீபத்திய தகுதி நீக்கம் காரணமாக ஜார்க்கண்ட் சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை 17 ஆக உள்ளது. சட்டசபையின் மொத்த எண்ணிக்கை 81. இதில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 30 மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு 1 உறுப்பி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in