‘நிதிஷ்குமார் கட்சி எம்எல்ஏக்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்’ - பரபரப்பு கிளப்பும் பாஜக எம்.பி

நிதீஷ் குமார்
நிதீஷ் குமார்

கடந்த ஆண்டு மகாராஷ்டிராவில் நடந்தது போன்ற அரசியல் நிகழ்வுகளை பிஹார் விரைவில் சந்திக்கும் என்று பாஜக எம்.பி பிரதீப் குமார் சிங் கூறியுள்ளார். மேலும், ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் அனைவரும் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அராரியா தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.பி பிரதீப் குமார் சிங், "ஜேடியுவின் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுடன் தொடர்பில் உள்ளனர். மகாராஷ்டிரா போன்ற அரசியல் நிகழ்வுகள் பிஹாரில் எப்போது வேண்டுமானாலும் நடக்கும். பிஹார் முதலமைச்சர் நிதிஷ் குமாரைத் தவிர அனைத்து ஜேடியு தலைவர்களும் பாஜகவுடன் கைகோர்க்க தயாராக உள்ளனர். நிதிஷ் குமார் தனித்து விடப்படுவார். நிதிஷின் கட்சியில் உள்ள அனைத்து எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் அவரால் சோர்வடைந்துள்ளனர்.

நிதிஷ் குமாரைத் தவிர அனைவருக்கும் எங்கள் கதவுகள் திறந்தே உள்ளன. நான் உள் தகவல்களை வெளியிடுகிறேன், இதை முழு நம்பிக்கையுடன் கூறுகிறேன். சிறிது நேரம் காத்திருங்கள். மகாராஷ்டிர மக்கள் உத்தவ் தாக்கரே தலைமையிலான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸை உள்ளடக்கிய மகா விகாஸ் அகாதி கூட்டணியால் ஏமாற்றமடைந்தது போல, பிஹார் மக்கள் ஜேடியு-ஆர்ஜேடி ஆளும் கூட்டணியின் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். மகாராஷ்டிர மக்கள் சிவசேனா மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர். அதே வழியில், பிஹாரில் நிதிஷ்குமாரை அவரின் கட்சியினர் கைவிடுவார்கள். பிஹார் முதல்வராக தேஜஸ்வி யாதவை எந்த எம்.பி.யும், எம்.எல்.ஏ.வும் ஏற்க மாட்டார்கள். வரும் நாட்களில் ஜே.டி.யு ஆட்சி முடிந்து விடும்" என்று அவர் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in