கர்நாடக பாஜக கூட்டணியில் சிக்கல்... எதிர்ப்பு குரல் எழுப்பும் ஜேடிஎஸ் தலைவர் இப்ராஹிம்!

மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கர்நாடக மாநில தலைவர் சி.எ.இப்ராஹிம்
மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கர்நாடக மாநில தலைவர் சி.எ.இப்ராஹிம்

பாஜகவுடன் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்க மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கர்நாடக மாநில தலைவர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அந்த கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் கூட்டணிகளை இறுதி செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.

இந்நிலையில், அங்கு வலுவான கூட்டணியை அமைக்க பாஜக முயற்சித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிரதான எதிர்க்கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு அங்கமாக மதச்சார்பற்ற ஜனதா தளம் செயல்படும் என கட்சியின் தலைவர் குமாரசாமி, பாஜக தலைவர்கள் அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்த பின் அறிவித்திருந்தார்.

அமித்ஷா, நட்டாவுடன், குமாரசாமி சந்திப்பு
அமித்ஷா, நட்டாவுடன், குமாரசாமி சந்திப்பு

இந்த அறிவிப்பிற்கு தற்போது கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கர்நாடக மாநில தலைவராக உள்ள சி.எம்.இப்ராஹிம் பாஜகவுடனான கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த கூட்டணி தொடர்ந்தால், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளிக்க அவரது ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டணி குறித்து ஆலோசனை கூட்டத்தில் இப்ராஹிம்
கூட்டணி குறித்து ஆலோசனை கூட்டத்தில் இப்ராஹிம்

தென் மாநிலங்களை பொறுத்தவரையில் கர்நாடகாவை தவிர இதுவரை பிற மாநிலங்களில் பாஜக கூட்டணியை உறுதி செய்யாத நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடனான கூட்டணியிலும் சிக்கல் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in