பிரஜ்வல் ரேவண்ணா இன்று நள்ளிரவில் நாடு திரும்புகிறாரா?... வெளியானது பரபரப்பு தகவல்!

பிரஜ்வல் ரேவண்ணா
பிரஜ்வல் ரேவண்ணா
Updated on
2 min read

பாலியல் வன்கொடுமை மற்றும் ஆபாச வீடியோக்கள் வழக்கில் சிக்கியுள்ள மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.பி.யும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணா, இன்று நள்ளிரவில் பெங்களூரு திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெர்மனியின் முனிச் நகரத்தில் இருந்து கர்நாடகா தலைநகர் பெங்களூருக்கு இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு வரக் கூடிய லுஃப்தான்சா விமானத்தில் பிரஜ்வல் ரேவண்ணா என்ற பெயரில் பிசினஸ் கிளாஸில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பெங்களூர் விமான நிலையத்துக்கு பிரஜ்வல் ரேவண்ணா வந்து இறங்கினால் அங்கேயே போலீஸாரால் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

பிரஜ்வல் விமான டிக்கெட்
பிரஜ்வல் விமான டிக்கெட்

பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்த அதே நாளில் இந்த டிக்கெட் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே இப்போதுள்ள நெடுக்கடியான சூழலில் அவர் இந்தியா திரும்புவாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ஹாசன் தொகுதி எம்.பியான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் வீடியோக்கள் வெளியாயின. பிரஜ்வல் ரேவண்ணாவின் வீட்டுபணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 3 பெண்கள் அளித்த புகாரின்பேரில் அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தேவகவுடாவின் மூத்த‌ மகனும், பிரஜ்வலின் தந்தையும், மஜத எம்எல்ஏவுமான‌ ரேவண்ணா கைது செய்யப்பட்டு ஜாமீனில் தற்போது வெளிவந்துள்ளார்.

ஆனால், இந்த விவகாரம் பூதாகரம் ஆனவுடனே பிரஜ்வல் ரேவண்ணா தூதரக பாஸ்போர்ட் மூலமாக ஜெர்மனிக்கு தப்பிச்சென்றுவிட்டார். எனவே இந்த வழக்கை விசாரிக்கும் கர்நாடக காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு விமான நிலைய அதிகாரிகளை எச்சரிக்கையுடன் இருக்கும்படி தெரிவித்துள்ளது. மேலும், பிரஜ்வல் ரேவண்ணாவை கண்காணிக்க லுக்அவுட் நோட்டீஸ் மற்றும் ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தேர்வு எழுத அனுமதி மறுப்பு... ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து பொறியியல் மாணவர் தற்கொலை!

பாடகி சுசித்ராவுக்கு முன்னாள் கணவர் கொடுத்த ரியாக்‌ஷன்... வைரலாகும் வீடியோ!

ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள்... ஜி.வி.பிரகாஷ் உருக்கம்!

ஷாக்... இந்து இளைஞரை திருமணம் செய்த முஸ்லிம் பெண் மீது கொலைவெறி தாக்குதல்!

டெல்லி, ராஜஸ்தானைத் தொடர்ந்து கான்பூரிலும் அதிர்ச்சி... 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in