`ஒற்றைத் தலைமை பிரச்சினைக்கு இவர்கள்தான் காரணம்'- கொந்தளிக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஜேசிடி பிரபாகர்

`ஒற்றைத் தலைமை பிரச்சினைக்கு இவர்கள்தான் காரணம்'- கொந்தளிக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஜேசிடி பிரபாகர்

``கட்சியினுடைய எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தங்களை காப்பாற்றிக் கொள்வதில் குறியாக இருக்கிற சிலர்தான் ஒற்றைத் தலைமை பிரச்சினைக்கு அடிப்படை காரணமாக இருந்திருக்கிறார்கள்'' என ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடிபிரபாகர் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு சண்டை சச்சரவோடு முடிவடைந்த நிலையில், பொதுக்குழு நடைபெற்றது செல்லாது என ஓபிஎஸ் தரப்பினரும், சட்டப்படி பொதுக்குழு செல்லும் என ஈபிஎஸ் தரப்பினரும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடிபிரபாகர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய ஜே.சி.டி.பிரபாகர், “ஓபிஎஸ்-க்கு எதிராகப் பேசியவர்கள் அனைவருக்கும் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து அனுமதி அளித்தார். இரண்டாவதாக என்னைப் பேச அழைத்தபோது பேச வேண்டாமென்று ஓபிஎஸ் தடுத்துவிட்டார். ‘எதற்காக அழைத்தீர்களோ அந்த கூட்டத்தின் பொருள் முடிந்துவிட்டது. இப்போது இந்த பிரச்சினையைப் பேசுவதில் நியாயம் இல்லை. வலிமையுள்ளவர்களாக தங்களைக் காட்டுவதா இருந்தால், ஒரு காலத்தில் நமக்கு எதிரில் அமர்ந்திருப்பவர்கள் வலிமை உள்ளவர்களாக மாறிவிட்டால் நம்முடைய நிலைமை என்னவாகும். இது கட்சியைப் பேராபத்திலே கொண்டுபோய் விடும்’ என அங்கிருந்தவர்களிடம் அழுத்தமாக தெரிவித்தேன்.

அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரும் செங்கோலை வாங்கிக் கொண்டும், மலர் மகுடம் சூட்டிக்கொண்டும், வீர வாளை ஏந்திக் கொண்டும் சில புகைப்படத்திற்கு போஸ் கொடுத்ததை நாடே அறியும். இரட்டை தலைமைதான் வேண்டும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை சொல்லிவந்த பொதுக்குழு உறுப்பினர்களின் திடீர் மனமாற்றத்திற்கு என்ன காரணம் என்பதைத் தொண்டர்கள் அறிய விரும்புகிறார்கள். இப்போது நடந்ததையெல்லாம் பார்க்கும் போது கட்சியின் நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமி பக்கமும், கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் அனைவரும் ஓபிஎஸ் பக்கமும் இருப்பதாக நான் பார்க்கிறேன். இது தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் இடையேயான போட்டியாக இருக்கிறது.

கட்சியினுடைய எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தங்களை காப்பாற்றிக் கொள்வதில் குறியாக இருக்கிற சிலர்தான் இந்த பிரச்சினைக்கு அடிப்படை காரணமாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் பொதுக்குழுவில் ஓபிஎஸ்சை கணக்கு அறிக்கை தாக்கல் செய்ய அனுமதிக்கவில்லை. அவர் பேச எழுந்த போது மைக்கை ஆஃப் செய்கிறார்கள். ஓபிஎஸ்சை நோக்கி வாட்டர் பாட்டில்களை வீசினார்கள். சிலர் ஆபாச வார்த்தைகளால் பேசினார்கள். கடமை கண்ணியம் கட்டுப்பாடுகள் எல்லாம் காற்றில் பறந்ததை நாடே பார்த்தது. அதிமுக ஓபிஎஸ் அவர்களின் சொத்தோ, ஈபிஎஸ் அவர்களின் சொத்தோ அல்ல. இது தொண்டர்களின் கட்சி” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in