'நியாயமற்ற முறையில் நான் குறிவைக்கப்படுகிறேன்’ - பாஜகவுக்கு எம்.பி. ஜெயந்த் சின்ஹா பதில்

ஜெயந்த் சின்ஹா
ஜெயந்த் சின்ஹா
Updated on
2 min read

தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்காதது, வாக்களிக்காதது ஆகியவற்றுக்கு விளக்கம் கேட்டு பாஜக அனுப்பிய கடிதத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சரும், அக்கட்சி எம்.பி-யுமான ஜெயந்த் சின்ஹா பதிலளித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம், ஹசாரிபாக் தொகுதியில் இருந்து பாஜக எம்பி-யாக ஜெயந்த் சின்ஹா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால் இந்த முறை அவர் மீண்டும் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கவில்லை. ஹசாரிபாக் தொகுதியில் இந்த முறை பாஜக வேட்பாளராக மணீஷ் ஜெய்ஸ்வால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இதன் காரணமாக அதிருப்தியில் இருந்த ஜெயந்த் சின்ஹா தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்கவில்லை. மேலும், அவர் தேர்தலில் வாக்களிக்கவும் இல்லை என தகவல்கள் பரவின.

இந்நிலையில் பிரச்சாரத்துக்கு வராதது, தேர்தலில் வாக்களிக்காதது, ஆகியவற்று விளக்கம் அளிக்குமாறு ஜெயந்த் சின்ஹாவுக்கு பாஜக தலைமை நோட்டீஸ் அனுப்பியது.

பாஜகவின் ஜார்க்கண்ட் பொதுச் செயலாளர் ஆதித்யா சாஹு அனுப்பியுள்ள இந்த கடிதத்துக்கு ஜெயந்த் சின்ஹா பதிலளித்துள்ளார். இது தொடர்பாக சாஹுவுக்கு அவர் எழுதியுள்ள இரண்டு பக்க பதில் கடிதத்தில், “உங்கள் கடிதம் வரப்பெற்றது. ஆனால், அதை ஊடகங்களுக்கும் வெளியிட்டதைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.

கட்சி நிகழ்வுகள், பேரணிகள் மற்றும் கட்சிக் கூட்டங்களுக்கு எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. நான் ஏதேனும் தேர்தல் நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும் என்று கட்சி விரும்பியிருந்தால், நீங்கள் நிச்சயமாக என்னைத் தொடர்புகொண்டிருக்கலாம். இருப்பினும், ஜார்க்கண்டில் இருந்து ஒரு மூத்த கட்சி நிர்வாகியோ அல்லது எம்.பி, எம்எல்ஏ-வோ யாரும் என்னை சந்திக்கவில்லை. எந்த நிகழ்ச்சிகளுக்கும், பேரணிகளுக்கும் அழைக்கவில்லை.

தனிப்பட்ட கடமைகளுக்காக நான் கடந்த 10ம் தேதி வெளிநாட்டிற்கு சென்றேன். இதன் காரணமாக முன்கூட்டியே, தபால் ஓட்டு வசதி மூலம் வாக்களித்தேன்.

பாஜக எம்பி ஜெயந்த் சின்ஹா
பாஜக எம்பி ஜெயந்த் சின்ஹா

எனக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை பகிரங்கமாக வெளியிடுவது எனது பார்வையில் சரியானது அல்ல. அர்ப்பணிப்புடன் செயல்படும் கட்சி தொண்டர்களுக்கு ஏமாற்றமளிப்பதுடன், இந்த அணுகுமுறை கட்சியின் கூட்டு முயற்சிகளையும் பலவீனப்படுத்தப் போகிறது. கட்சி மீதான விசுவாசம், கடின உழைப்பு இருந்தபோதிலும், நான் நியாயமற்ற முறையில் குறிவைக்கப்படுவதாக தோன்றுகிறது.” இவ்வாறு அந்த கடிதத்தில் ஜெயந்த் சின்ஹா, விரிவாக தனது பதிலை தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

திருத்தணி முருகன் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திடீர் சாமி தரிசனம்... அடுத்த படத்துக்கான பணிகள் துவக்கமா?

வீடியோ காலில் எதற்கு பேசுற? மனைவியைக் கொலை செய்து புதைத்த கணவன்!

வங்கக்கடலில் 'ரெமல்' புயல்... 26ம் தேதி கரையைக் கடக்கும் என கணிப்பு!

அதிர்ச்சி வீடியோ... மருத்துவமனைக்குள் பாய்ந்த ஜீப்... அவசர சிகிச்சை பிரிவு வரை ஓட்டிச் சென்ற போலீஸார்!

மெக்சிகோவில் பிரச்சாரத்தில் மேடை சரிந்து விபத்து: 5 பேர் பலி; 50 பேர் படுகாயம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in