`துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதை நிரூபித்த பெண் ஆளுமை'- ஜெயலலிதாவை வாழ்த்தும் தமிழிசை

ஜெயலலிதாவுடன் தமிழசை
ஜெயலலிதாவுடன் தமிழசை `துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதை நிரூபித்த பெண் ஆளுமை'- ஜெயலலிதாவை வாழ்த்தும் தமிழிசை

அதிமுக பொதுச்செயலாளர் மறைந்த ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பிறந்தநாளையொட்டி நடிகர் ரஜினிகாந்த், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் முருகன் உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வீடியோவில், ``ஜெயலலிதாவைப் போல இன்னொரு பெண்மணியை பார்க்கவே முடியாது. அவருடைய அழகு, கம்பீரம், அறிவு, துணிச்சல், ஆளுமை மதிப்புக்குரியது. இந்தியாவில் உள்ள எல்லா அரசியல் தலைவர்களும் ஜெயலலிதா அவர்களை அவ்வளவு மதிப்பார்கள். அவருடைய திறமையை பார்த்து பிரமித்தார்கள்" என்று கூறியுள்ளார்.

ஜெயலலிதாவுடன் தமிழசை
ஜெயலலிதாவுடன் தமிழசை

இதனிடையே, தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், "பணிந்து நின்றுதான் பணிசெய்ய வேண்டும் என்பதில்லை... துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிரூபித்த பெண் ஆளுமை மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினமான இன்று அவரது நினைவை போற்றுகிறேன்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in