ஜெயலலிதாவின் வேதா இல்லம்: உச்ச நீதிமன்றம் சென்றது அதிமுக

ஜெயலலிதாவின் வேதா இல்லம்: உச்ச நீதிமன்றம் சென்றது அதிமுக

ஜெயலலிதாவின் இல்லத்தை தமிழ்நாடு அரசு கையகப்படுத்தியதை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்த நிலையில், அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அதிமுக மேல்முறையீடு செய்துள்ளது.

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடமையாக்க கையகப்படுத்தியபோது ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் உயர் நீதிமன்றத்தை நாடி இருந்தார். 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் தனி நீதிபதி இந்த வழக்கை விசாரித்து ஜெயலலிதாவின் இல்லத்தை கையகப்படுத்திய தமிழக அரசின் முடிவை ரத்து செய்திருந்தார். இதையடுத்து, வேதா இல்லம் தீபா, தீபக்கிடம் தமிழக அரசு ஒப்படைத்தது. கடந்த அதிமுக ஆட்சியில் வேதா இல்லத்திற்காக நீதிமன்றத்தில் செய்யப்பட்ட டெபாசிட் தொகையை தமிழக அரசு வட்டியுடன் திரும்ப பெற்றுக் கொண்டது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அதிமுக சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு கடந்த ஜனவரி மாதம் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அதிமுக மேல்முறையீடு செய்துள்ளது.

Related Stories

No stories found.