ஜெயலலிதா மரண விசாரணை அறிக்கை: தமிழக அமைச்சரவையில் முக்கிய முடிவு

ஜெயலலிதா மரண விசாரணை அறிக்கை: தமிழக அமைச்சரவையில் முக்கிய முடிவு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண விசாரணை அறிக்கை தொடர்பாக தமிழக அமைச்சரவையில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் அமைச்சரவை கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம், ஜெயலலிதா மரண விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை அறிக்கை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவரது தோழி சசிகலா, மருத்துவர் சிவக்குமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் உள்ளிட்டோர் மீது அரசு விசாரணைக்கு உத்தரவிட ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. ஆணைய பரிந்துரை தொடர்பாக சட்ட வல்லுநர்களின் ஆலோசனையை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்று உரிய நடவடிக்கை மேற்கொண்ட பின் அதற்கான விவர அறிக்கையுடன் சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் நடவடிக்கை எடுத்ததற்கான விவர அறிக்கையுடன் ஆணையத்தின் அறிக்கையை சட்டப்பேரவையில் வைக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in