ஜெயலலிதாவின் சேலையை கிழித்து தாக்கியபோது ஸ்டாலின் வேடிக்கை பார்த்தார்... சசிகலா அதிர்ச்சி தகவல்!

சசிகலா
சசிகலா

’’1989ம் ஆண்டு சட்டப்பேரவையில், இன்றைக்கு தமிழக அமைச்சராக இருப்பவர் தரையில் கூட நடக்காமல் மேஜை மீது ஏறி விலங்குகள் மரக்கிளைகளில் தாவுவது போல் ஒவ்வொரு மேஜையாக தாவித் தாவியே ஜெயலலிதா அருகில் வந்து வேட்டியை மடித்துக் கட்டி ஜெயலலிதாவின் தோள் பட்டையில் எட்டி உதைத்தார்’’ என ஜெயலலிதாவின் தோழி சசிகலா பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

ஜெயலலிதா மீது தாக்குதல்
ஜெயலலிதா மீது தாக்குதல்

நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜெயலலிதா சேலையை பிடித்து இழுத்த விவகாரம் குறித்து பேசினார். இதற்கு மறுப்பு தெரிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், ‘’அது நாடகம்’’ என விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜெயலலிதாவின் தோழி சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘’1989ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் மிகப்பெரிய கரும்புள்ளியாக கருதப்படும் ஒரு கொடூரம் நிகழ்த்தப்பட்ட நாள். அன்று தமிழக அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த தினம். அன்றைய தினம் தமிழக சட்டமன்றத்தில் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவராக விளங்கிய ஜெயலலிதாவை ஒரு பெண் என்றும் பாராமல், வரலாற்றில் எங்கும் கண்டிராத வகையில் திமுகவினரால் மிகப்பெரிய கொடுமை இழைக்கப்பட்டது.

அன்றைய தினம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பாக அன்றைக்கு தோழமை கட்சியை சேர்ந்த குமரி ஆனந்தன் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார். அதாவது காவல்துறையை தன் வசம் வைத்து இருந்த அன்றைய முதல்வர் கருணாநிதி செய்த சட்ட மீறல்களை சுட்டிக் காட்டி அதை முதலில் விவாதிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டது.

ஜெயலலிதா மீது தாக்குதல்
ஜெயலலிதா மீது தாக்குதல்

அப்போது நிலை தடுமாறி நாற்காலியில் சாய்ந்த ஜெயலலிதா மீண்டும் எழுந்து நியாயம் வேண்டும் நியாயம் வேண்டும் என்று தொடர்ந்து கோஷம் போட்டுக்கொண்டே நிற்கிறார். அதன்பிறகு கோவை மு.கண்ணப்பன் ஓடி வந்து தாக்குகிறார். வீரபாண்டி ஆறுமுகம் ஜெயலலிதாவின் முடியைப் பிடித்து இழுக்கிறார். ஜெயலலிதா மீது புத்தகங்களை எறிந்து தாக்குகிறார்கள்.

அச்சமயம் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், திருநாவுக்கரசர் ஆகியோர் ஜெயலலிதா மீது புத்தகங்கள் விழாமல் இருப்பதற்காக எழுதும் அட்டையை வைத்து மறைத்து பாதுகாக்கிறார்கள். அப்போது பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து இருந்த திமுகவை சேர்ந்த நிர்வாகி, இன்றைக்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர். கழகத்தினர் அனைவரையும் தாக்கச் சொல்லி கத்துகிறார்.

உடனே அங்கு இருந்த பொன்.முத்துராமலிங்கம், அவைத்தலைவர் மேஜையில் இருந்த பித்தளை மணியை எடுத்து ஜெயலலிதா மீது வேகமாக வீசுகிறார். கடவுளின் அருளால் ஜெயலலிதா தலையில் அது விழாமல் உயிர்பிழைத்தார். இந்த கலவரத்திற்கிடையில் இன்றைக்கு தமிழக அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்ற ஒரு மூத்த அமைச்சர் ஜெயலலிதாவின் சேலையில் கைவைத்து இழுத்தார். ஈவு இரக்கமின்றி ஜெயலலிதாவின் ஆடையை கிழித்து அசிங்கப்படுத்திய கொடூரர்கள்தான் இன்றைக்கு பகல் வேஷம் போடுகின்றனர்

ஜெயலலிதா சசிகலா
ஜெயலலிதா சசிகலா

இதை தற்போது நாடகம் என்று சொல்லி திமுகவினர் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறார்கள். இதில் வேடிக்கை என்ன வென்றால் நடந்தவை அனைத்தையும் சட்டப்பேரவையில் நின்று நேரில் வேடிக்கை பார்த்தவர் தான் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால் ஒன்றுமே அறியாதவராக நிகழ்ந்த உண்மைகளை மறைக்கப் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?

நடந்த உண்மைகள் அத்தனையும் இன்றைக்கும் தமிழக சட்டப்பேரவை குறிப்புகளிலும், அன்றைய காலகட்டங்களில் வெளிவந்த பத்திரிகைகளிலுமே சாட்சியாக இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக ஜெயலலிதா எனது உடன் பிறவா சகோதரியாக என்னிடம் நடந்ததை அனைத்தையும் சொன்னதைத்தான் இப்போது வெளிப்படுத்தி இருக்கிறேன்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in