தேர்தல் அதிகாரியை மிரட்டியதாக பாஜக வேட்பாளரும், நடிகையுமான ஜெயலட்சுமி மீது வழக்கு

தேர்தல் அதிகாரியை மிரட்டியதாக பாஜக வேட்பாளரும், நடிகையுமான ஜெயலட்சுமி மீது வழக்கு
ஜெயலட்சுமி

வாக்குப்பதிவு இயந்திரத்தை மாற்றிவிட்டதாகக் கூறி தேர்தல் அதிகாரியை சிறைபிடித்து மிரட்டல் விடுத்ததாக பாஜக வேட்பாளரும், நடிகையுமான ஜெயலட்சுமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, அம்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட 90-வது வார்டில் பாஜக சார்பில் நடிகை ஜெயலட்சுமி, திமுக சார்பில் ராஜகோபால், அதிமுக சார்பில் அய்யனார் ஆகியோர் உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர்.

கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்த பின்னர், காலி வாக்கு இயந்திரத்தை தேர்தல் அதிகாரிகள் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். அப்போது, வாக்கு இயந்திரத்தை மாற்றி கள்ள ஓட்டுப்போட முயலுவதாக, பாஜக வேட்பாளர் ஜெயலட்சுமி மற்றும் பாஜகவினர் தேர்தல் அதிகாரியை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஜெயலட்சுமி
ஜெயலட்சுமி

இதைத் தொடர்ந்து, ஜெயலட்சுமி உட்பட 50-க்கும் மேற்பட்ட பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோவை, நடிகை ஜெயலட்சுமி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

இந்நிலையில் அரசு உத்தரவை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக, பாஜக வேட்பாளர் ஜெயலட்சுமி மற்றும் பாஜகவினர் மீது அரசு உத்தரவை மீறுதல், சட்டவிரோதமாகக் கூடுதல், சிறை வைத்தல், கலகம் செய்யத் தூண்டி விடுதல், பொது அமைதியைக் கெடுக்கும் வகையில் தூண்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் திருமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in