சிறையிலிருந்து வெளியே வந்தார் ஜெயக்குமார்

பட்டாசு வெடித்து வரவேற்ற அதிமுகவினர்
சிறையிலிருந்து வெளியே வந்தார் ஜெயக்குமார்

நில அபகரிப்பு உள்பட 3 வழக்குகளில் ஜாமீன் கிடைத்துள்ள நிலையில், சென்னை புழல் சிறையில் இருந்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் இன்று வெளியே வந்தார். அவரை அதிமுகவினர் பட்டாசு வெடித்து வரவேற்றனர்.

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின்போது திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்டார். அதன் பின் சாலை மறியல், நில அபகரிப்பு உள்ளிட்ட அடுத்தடுத்த வழக்குகளிலும் ஜெயக்குமார் கைது செய்யபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கெனவே திமுக நபரை தாக்கிய வழக்கு, சாலை மறியல் செய்த வழக்குகளில் ஜாமீன் கிடைத்திருந்த நிலையில், நில அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு ஜெயக்குமார் சிறையில் இருந்து ஜாமீனில விடுவிக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியேற வந்த ஜெயக்குமாரை அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து வரவேற்றனர். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி திருச்சியில் 2 வாரம் தங்கி இருந்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ஜெயக்குமார் கையெழுத்திடுகிறார். இதனால் அவர் திருச்சி செல்ல இருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in