`விஜயபாஸ்கருக்கு எந்தத் தொடர்பும் இல்லை; சசிகலா, ஓபிஎஸ்தான் பொறுப்பு’‍- சொல்கிறார் ஜெயக்குமார்

`விஜயபாஸ்கருக்கு எந்தத் தொடர்பும் இல்லை; சசிகலா, ஓபிஎஸ்தான் பொறுப்பு’‍- சொல்கிறார் ஜெயக்குமார்

``ஜெயலலிதா உடல்நலம் சரியில்லாத போது சசிகலா, ஓபிஎஸ் மட்டுமே கவனித்து கொண்டார்கள். அவர்கள்தான் அனைத்திற்கும் பொறுப்பு'' என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பசும்பொன் முத்துராமலிங்கம் பிறந்தநாளன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை நந்தனத்தில் உள்ள அவரின் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளோம். அதற்காக அனுமதி வேண்டி காவல்துறைக்குக் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இதுவரை வாய்திறக்காமல் மௌனம் காத்து வருகிறார். எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராகப் பதவி ஏற்ற பிறகு அதிமுக சார்பாக பொதுக் கூட்டம் நடத்தி இருக்கிறோம். கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறோம். பொன்விழா ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடி இருக்கிறோம். இதுபோல் ஓபிஎஸ் ஏதாவது செய்திருக்கிறாரா? சிம்பிளாக ஏதோ அறிக்கை விட்டிருக்கிறார். ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்ததே உண்மை வெளிவரவேண்டும் என்பதற்குத்தான்.

ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாமல் போனபிறகு முதல்வரின் அனைத்து பொறுப்புகளையும் ஓபிஎஸ் அவர்களே கவனித்து கொண்டார்.  அதில் விஜயபாஸ்கர் பங்கு எதுவும் இல்லை. எல்லாமே சசிகலாவும், ஓபிஎஸ்சும்தான் பார்த்துக் கொண்டார்கள்.  என் மீது எந்த புகார் வந்தாலும் நான் சட்டப்படி சந்திக்க தயார் என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும் குற்றம் செய்தவர்கள் என்ற அடிப்படையில்தான் ஆணைய அறிக்கை முடிவுகள் இருக்கின்றன” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in