பள்ளிவாசல்களின் பராமரிப்பு நிதியை உயர்த்திய தமிழ்நாடு முதல்வருக்கு மமக நன்றி

ஜவாஹிருல்லா
ஜவாஹிருல்லா

பள்ளிவாசல்களுக்கான பராமரிப்பு நிதியை ரூ.10 கோடியாக உயர்த்தி அறிவித்த தமிழக முதல்வருக்கு மனிதநேய மக்கள் கட்சி நன்றி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக சட்டபேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் நான் பேசினேன். அப்போது தமிழ்நாடு வக்ப் வாரியம் மூலம் தமிழ்நாடு பள்ளிவாசல்களுக்கு வழங்கும் பெரிய பராமரிப்பு நிதியை உயர்த்தி தரவேண்டும் என ஜன.11-ல் கோரிக்கை வைத்தேன்.

இந்த தொகை கடந்த காலங்களில் ரூ.5 கோடியாக இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்தபின், ரூ.6 கோடியாக உயர்த்தியது. இந்நிதியை மேலும் உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்தேன்.

அதனடிப்படையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு பதிலுரைத்துப் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், எனது கோரிக்கையை மேற்கோள் காட்டி, பள்ளிவாசல்களுக்கான பராமரிப்பு நிதியை ரூ.10 கோடியாக உயர்த்தி தரப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பிற்காக மமக, தமிழக முஸ்லிம் சமுதாயம் சார்பில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நகர்ப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கு அமல்படுத்திய காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்தி, 1 முதல் 5-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கும் மமக சார்பில் வரவேற்கின்றேன்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in