`அது’ தப்பில்லைன்னா... `ஜெய்ஸ்ரீராம்’ கோஷம் தப்பில்லை; வானதி சீனிவாசன்!

`அது’ தப்பில்லைன்னா... `ஜெய்ஸ்ரீராம்’ கோஷம் தப்பில்லை;  வானதி சீனிவாசன்!

’’விளையாட்டின் போது பிரார்த்தனை செய்வது தவறில்லை என்றால் கோஷமிடுவதும் தவறில்லை’’ என்று கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி சனிக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. பாகிஸ்தான் அணியின் வீரர் ரிஸ்வான் மைதானத்திலிருந்து வெளியேறி பெவிலியனுக்கு நடந்து செல்லும்போது இந்திய ரசிகர்கள் சிலர் 'ஜெய் ஸ்ரீராம்' என்று முழக்கமிட்டனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு உதயநிதி மற்றும் சீமான் உள்ளிட்டோர் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், ‘’கிரிக்கெட் விளையாட்டின் போது ரசிகர்கள் கோஷமிடுவது தவறில்லை. விளையாட்டின் போது பிரார்த்தனை செய்வது எப்படி தவறில்லையோ அதே போல ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிடுவது தவறில்லை.

ஜெயிக்க வேண்டுமென மைதானத்தில் இறைவனை வேண்டுவது தப்பில்லை என்றால் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் போடுவதும் தப்பில்லை. இது தப்புன்னா எல்லாத்தையும் தப்புன்னு சொல்லுங்க. இது ரைட்டுன்னா எல்லாத்தையும் ரைட்டுன்னு சொல்லுங்க.

இதை அரசியலாக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் யார்? விளையாட்டை அரசியலாக பார்க்கக்கூடாதென்று நினைப்பவர்கள் இதை அரசியலாக பார்க்கக்கூடாது. இதை நீங்கள் அரசியல் பண்ணனும் என்றால் நியாயமாக அரசியல் பண்ணுங்க'' என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

அமைச்சர் அன்பில் மகேஷை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆவேசம்!

சிவப்பு நிறத்தில் மாறிய கடல்... செல்ஃபி எடுக்க குவிந்த மக்கள்

பூங்காவில் அத்துமீறிய காதலர்கள்... அலற விட்ட போலீஸார்!

தொடரும் போர்... 10 லட்சம் மக்கள் வெளியேறிய பரிதாபம்

டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.56,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in