ஜம்மு - காஷ்மீர் சட்ட திருத்த மசோதாக்கள் எதற்காக? - அமித் ஷா விளக்கம்!

ஜம்மு - காஷ்மீர் சட்ட திருத்த மசோதாக்கள் எதற்காக? - அமித் ஷா விளக்கம்!
நாடாளுமன்றத்தில் அமித்ஷா

“ஜம்மு - காஷ்மீர் தொடர்பாக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 2 மசோதாக்கள், கடந்த 70 ஆண்டுகளாக உரிமைகள் பறிக்கப்பட்டவர்களுக்கான நீதியை வழங்கும்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் பேசினார்.

ஜம்மு - காஷ்மீர் சட்ட திருத்த மசோதாக்கள்  மீதான விவாதம்
ஜம்மு - காஷ்மீர் சட்ட திருத்த மசோதாக்கள் மீதான விவாதம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்ட ஜம்மு - காஷ்மீர் இடஒதுக்கீடு சட்ட திருத்த மசோதா, ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பு சட்ட திருத்த மசோதா ஆகியவற்றின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

''ஜம்மு - காஷ்மீரில் வாக்கு அரசியலை பொருட்படுத்தாமல் தீவிரவாதத்தை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். காஷ்மீர் பண்டிட்டுகள் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறியிருக்கக் கூடாது. தீவிரவாதம் காரணமாக காஷ்மீரிலிருந்து வெளியேறியவர்கள் சட்டப் பேரவையில் இடம்பெறும் வகையில் ஒரு மசோதாவில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

கடந்த 70 ஆண்டுகளாக உரிமைகள் பறிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதே இந்த மசோதாக்களின் குறிக்கோள். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எதிராகவும், அவர்களின் வழியிலும் குறுக்கிட்ட கட்சி ஒன்று உண்டென்றால் அது காங்கிரஸ் தான். நரேந்திர மோடி ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து பிரதமராகியுள்ளார். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் ஏழ்மையில் உள்ளவர்களின் வலி அவருக்குத் தெரியும்''

இவ்வாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in