அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: ஆளுநர் தமிழிசை

அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: ஆளுநர் தமிழிசை

அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்பது ஆளுநருடைய கருத்தாக இல்லாமல் என்னுடைய தனிப்பட்ட கருத்து என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரி 106-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன், அவரது கணவரோடு வந்து மரியாதை செலுத்தினார்.

இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்," படிப்போடு சத்துணவைக் கொடுத்தவர் எம்ஜிஆர். அதைத்தான் இன்றைக்கு புதிய கல்விக் கொள்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மிகச் சிறந்த ஆட்சியாளர். எங்களின் திருமணத்தை நடத்தி வைத்தவர் என்ற அடிப்படையில் வந்து மரியாதை செலுத்தியுள்ளோம்.

எம்ஜிஆர் நல்ல கனவோடு கட்சியை நடத்தி வந்தார். அதனால் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்றுவதே சிறப்பாக இருக்கும் என்பது ஆளுநராக அல்லாமல் எனது தனிப்பட்ட கருத்து. எம்ஜிஆர் தேசியம் போற்றிய திராவிட தலைவர்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in