அது நடக்கவே நடக்காது! - பாஜகவிற்கு ஸ்டாலின் எச்சரிக்கை

அது நடக்கவே நடக்காது! - பாஜகவிற்கு ஸ்டாலின் எச்சரிக்கை

" அரசியலைப் புகுத்தி பாஜவை பலப்படுத்த நினைத்தால் அது நடக்கவே நடக்காது" என்று சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசனுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது சென்னை மேற்கு மாம்பலம் அயோத்யா மண்டபம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் கொண்டு வந்தார்.

இந்த தீர்மானம் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்," ஏழை, எளிய மக்களைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகளில் நீங்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். பெட்ரோல், டீசல், கியாஸ் விலை அதிகரித்துக் கொண்டே போகிறது. அதைக் கட்டுப்படுத்த மத்திய அரசை நீங்கள் வலியுறுத்த வேண்டும்" என்று பேசினார்.

" அது மட்டுமின்றி எது சாதகம் என்பதை புரிந்து நடக்க வேண்டும். தேவையில்லாமல் அரசியலைப் புகுத்தி உங்கள் கட்சியைப் பலப்படுத்த நினைத்தால் அது நடக்கவே நடக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று வானதி சீனிவாசனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்டாலின் பேசினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in