`விஜய் அரசியலுக்கு வந்தால் வலிமையாக இருக்கும்; அவர்தான் என்னை ஆதரிக்க வேண்டும்’- சொல்கிறார் சீமான்

சீமான்
சீமான்`விஜய் அரசியலுக்கு வந்தால் வலிமையாக இருக்கும்; அவர்தான் என்னை ஆதரிக்க வேண்டும்’- சொல்கிறார் சீமான்

நடிகர் விஜய் அரசியலுக்கு வர முயற்சிக்கிறார் அவர் வந்தால் நிச்சயம் வலிமையாக இருக்கும். விஜய்யை நான் ஆதரிக்க வேண்டியதில்லை. அவர்தான் என்னை ஆதரிக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ‘’ தமிழ்நாடு என்றிருந்தது தமிழர்களின் சுடுகாடாக மாறி வருகிறது. இன்றைக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இன்னும் தொடர்கதையாகத்தான் இருக்கிறது. வேங்கைவயல் பிரச்சினையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று வரை நியாயம் கிடைக்கவில்லை. பெரியார் என்ன செய்தார் தன் சொத்தைப் பாதுகாக்க வாரிசு வேண்டுமென்று கூறினார். அப்போ அவர் போராளி அல்ல, முதலாளியாகி விட்டார்.

அரசியலுக்கு வருவதற்கான முயற்சியை தான் தம்பி விஜய் செய்கிறார். அதை நான் வரவேற்கிறேன். மாற்று என்பதில் இந்த கட்சியை விட்டால் அந்த கட்சி என்று அரை நூற்றாண்டுகளை இந்த நிலம் கடந்துவிட்டது. தம்பியெல்லாம் வரும்போது இன்னும் வலிமையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைத்து தான் இதையெல்லாம் செய்கிறார். நான் யாரையும் ஆதரிக்க வேண்டியதில்லை. தம்பிதான் என்னை ஆதரிக்க வேண்டும். எங்களின் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு வருபவர்கள் எங்களுடன் இணைந்து பயணிக்கலாம்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in