
தெலங்கானா அமைச்சர் வீடு உள்பட 50 இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் மல்லா ரெட்டி. இவர் மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை மற்றும் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இவரது வீடு மற்றும் அவரது மகன் மகேந்திரரெட்டி, மருமகள் மரி ராஜசேகர் வீடுகளில் வருமானவரித்துறையினர் இனறு சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அமைச்சர் மல்லா ரெட்டிக்குத் தொடர்புடைய 50 இடங்களில் 50 குழுக்கள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரையடுத்து, இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த சோதனை தெலுங்கானா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.