அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட நிலையில் இரண்டாவது நாளாக இன்று தொடர்கிறது.
சென்னை மற்றும் புறநகரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வந்தனர். வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வருமான வரித் துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
சென்னை எம்ஜிஆர் நகர் சப்தகிரி காலனியில் உள்ள தனியார் நிறுவனம், சென்னை தி.நகர் பார்த்தசாரதிபுரம் பகுதியில் உள்ள பந்தாரி நிறுவனம் போன்றவற்றில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதேபோல துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, நீலாங்கரை, நாவலூர், ஓ.எம்.ஆர், எண்ணூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் காசி என்பவருக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித் துறை சோதனை நடந்தது. இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சுமார் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுகிறது.