எடப்பாடி பழனிசாமியுடன் அண்ணாமலை, சி.டி.ரவி சந்திப்பு
எடப்பாடி பழனிசாமியுடன் அண்ணாமலை, சி.டி.ரவி சந்திப்பு`தேமுதிகவும், அதிமுகவும் ஒன்றுபடுவது மிக அவசியம்'- அண்ணாமலை அறிக்கையால் குழப்பம்

`தேமுதிகவும், அதிமுகவும் ஒன்றுபடுவது மிக அவசியம்'- அண்ணாமலை அறிக்கையால் குழப்பம்

"ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக என்னும் தீய சக்தியை தோற்கடிக்க தேமுதிகவும், அதிமுகவும் ஒன்றுபடுவது மிக அவசியம்" என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை குழப்பதை ஏற்படுத்தியது.

அண்ணாமலையின் குழப்பமான அறிக்கை
அண்ணாமலையின் குழப்பமான அறிக்கை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளரை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தில் விறுவிறுப்பு காட்டு வருகிறது. அதே நேரத்தில் பிரிந்து கிடக்கிற அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓபிஎஸ் அணியும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. கூட்டணி கட்சி தலைவர்களை இரு அணியினரும் சந்தித்து ஆதரவு கேட்டிருந்தனர். தமாகா, புரட்சி பாரதம், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்துவிட்டன. ஆனால், பாஜக யாருக்கு ஆதரவு அளிப்பது என்று இன்னும் தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் அண்ணாமலை இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக பணபலம் மற்றும் அரசு இயந்திரங்களை தவறாக பயன்படுத்துவதால் இடைத்தேர்தல் முன்னேற்பாடுகள் எப்படி நடக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இப்போது ஈரோட்டில் நடப்பதை எல்லாம் பார்த்து வருகிறோம். அதனால் தான் இந்த இடைத்தேர்தலில் திமுக என்னும் அந்தத் தீய சக்தியை தோற்கடிக்க தேமுதிகவும், அதிமுகவும் ஒன்றுபடுவது மிக அவசியம்.

ஓ.பன்னீர்செல்வத்துடன் அண்ணாமலை, சி.டி.ரவி சந்திப்பு
ஓ.பன்னீர்செல்வத்துடன் அண்ணாமலை, சி.டி.ரவி சந்திப்பு

இன்று காலை தமிழக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், ஈரோடு இடைத்தேர்தல் மற்றும் தமிழகம் தொடர்பான பிற பிரச்சினைகள் குறித்து பேசினார்கள். இது ஒரு நல்ல முன்னேற்றம். நமது தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சார்பாக சில விஷயங்களை தெரிவித்தேன். அதையெல்லாம் உங்களிடம் தனித்தனியாக. என்ன பேசினோம் என்பதை இப்போது நான் வெளியிட இயலாது. இந்த இடைத்தேர்தலில் தமிழகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு திமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்ற மக்கள் விருப்பத்தை இருவரிடம் வலியுறுத்தி இருக்கிறோம்'' என்று கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in