’சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சினையை பேசாது, கட்சி பிரச்சினை பேசுவதா?’ -நயினார் நாகேந்திரன் வேதனை

 நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்’சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னைகளை பேசாமல், கட்சி பிரச்னையை பேசுவது வேதனையளிக்கிறது’ - நயினார் நாகேந்திரன்

’’மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சினைகளை பேசாது கட்சி பிரச்சினையை பேசுவது வருத்தம் அளிக்கிறது’’ என தமிழக பாஜக சட்டமன்றத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தகுதி இழப்பு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று விவாதம் நடத்தப்பட்டது. விவாதத்தின் போது தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவர் செல்வபெருந்தகை பேசியதற்கு பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜகவினர் சார்பாக அக்கட்சியின் சட்டமன்றக்குழு தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார். செல்வபெருந்தகை மற்றும் நயினார் நாகேந்திரன் பேசியதை சபாநாயகர் அவைக்குறிப்பில் இருந்து நீக்கியதும் நடந்தேறியது.

தொடர்ந்து தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்யும் வகையில் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’பாஜக உறுப்பினர்கள் என்றைக்குமே நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் குறித்தோ அல்லது நீதிமன்ற விவகாரங்கள் குறித்தோ அவையில் பேசியது கிடையாது.

நாடாளுமன்ற விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் பேசுவது மரபல்ல என்பதைத்தான் நாங்கள் வலியுறுத்தினோம். சட்டப்பேரவை என்பது மக்கள் பிரச்சனைகளை விவாதிப்பதற்கான இடம். அதனைத் தவிர்த்து கட்சி பிரச்சனையை பேசுவது வருத்தம் அளிக்கிறது’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in