ஒரே நாடு, ஒரே வரி வைத்து அரசியல் செய்வது சுலபம், செயல்படுத்துவது கடினம்: நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஒரே நாடு, ஒரே வரி வைத்து அரசியல் செய்வது சுலபம், செயல்படுத்துவது கடினம்: நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

`ஒரே நாடு, ஒரே வரி’ என்பது போன்ற ஸ்லோகன்களை வைத்து அரசியல் செய்வது சுலபம். ஆனால், அதை செயல்படுத்துவது கடினம்'' என்று டெல்லியில் தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி கவுன்சிலின் 49-வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "ஜி.எஸ்.டி கவுன்சிலின் 49-வது கூட்டம் மதுரையில்தான் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த தேதியில் மதுரையில் நடத்த முடியாத நிலை ஏற்பட்ட காரணத்தால் இந்த கூட்டத்தை டெல்லியிலேயே நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அதனடிப்படையில் டெல்லியில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. அடுத்த ஜி.எஸ்.டி கூட்டம் மதுரையில்தான் நடைபெறும்.

ஒரே தேசம், ஒரே வரி என்பது போன்ற ஸ்லோகன்களை வைத்து அரசியல் செய்வது சுலபம். ஆனால் அதனை செயல்படுத்துவது மிகவும் கடினம். ஜி.எஸ்டி இழப்பு நீட்டிப்பு தொடர்பான விவகாரத்தை இதுவரை மத்திய அரசின் தரப்பு தெரிவிக்கவில்லை. கூட்டாட்சி தத்துவத்தின்படி ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெறுவதாக இருந்தால், ஜி.எஸ்.டி இழப்பீடு தொடர்பாகவும் இந்த கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்க வேண்டுமே தவிர தனியாக விவாதிக்கப்படும் என்று கூறக்கூடாது" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in