புரிந்து பேச வேண்டும்- சீமானுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் அட்வைஸ்

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

நீட் தேர்வு எதிர்ப்பு என்பது திமுகவின் காலம்காலமான நிலைப்பாடு, அந்த தேர்வால் பல மாணவர்கள் தங்களது உயிரை மாய்த்து வருகிறார்கள் என்பதெல்லாம் சீமான் போன்றவர்கள் புரிந்து பேச வேண்டுமென அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’நீட் எதிர்ப்பு என்பது திமுகவின் காலம்காலமான நிலைப்பாடு. வட இந்தியாவில் மாணவ, மாணவிகள் நீட் தேர்வால் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்களை புரிந்து கொண்டு சீமான் போன்றவர்கள் பேச வேண்டும்.

மேலும் எல்லோரும் சமத்துவமாக சமமாக வாழ வேண்டும், இறை வழிபாட்டு முறை, சமத்துவத்தை சார்ந்து இருக்க வேண்டும் என்பது தான் திமுகவின் நிலைப்பாடு. திமுக ஆன்மிகவாதிகளுக்கு எதிரான இயக்கம் என்று கூறுவது அப்பட்டமான பொய்’’ என கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in