அதிமுகவை காப்பாற்ற திமுகவுக்கு வாக்களியுங்கள்... கொமதேக தலைவரின் அடடே கோரிக்கை!

ஈஸ்வரன்
ஈஸ்வரன்

அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்றால் அதிமுக தொண்டர்கள் இந்தத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் வித்தியாசமான வேண்டுகோளை விடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு கட்சியின் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். அந்த கட்சியின் தலைவர் ஈஸ்வரன், திமுகக்கு ஆதரவாக கொங்கு பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இன்று ஈரோட்டில் திமுக வேட்பாளர் பிரகாஷுக்கு ஆதரவாக அவர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய  ஈஸ்வரன் ’அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்றால் அக்கட்சியின் தொண்டர்கள் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.

"கூட்டணியில் இருந்து வெளியே வருவதுபோல் எடப்பாடி பழனிசாமி வெளியே வந்து தேர்தலுக்குப் பின் மீண்டும் பாஜகவை ஆதரிப்பார். ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணிக் கட்சிகளை பாஜக அழித்துவரும் நிலையில் வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமரானால் அதிமுக என்ற கூட்டணிக் கட்சியை பாஜக அழித்துவிடும். அதன்பின்னர்  அதிமுக என்ற கட்சியே இருக்காது.

எனவே அதிமுக காப்பாற்றப்பட வேண்டுமென்றால் முதலில் பாஜக தோல்வி அடைய வேண்டும். பாஜக தோல்வி அடைய வேண்டுமென்றால் அதிமுக தொண்டர்கள்  திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்" என்று ஈஸ்வரன் பேசியுள்ளார். அதிமுகவினர் அனைவரும் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...    

12ம் வகுப்பு வேதியல் தேர்வு... தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க உத்தரவு!

தலையில் விசிக; கழுத்தில் திமுக... பறையடித்து பட்டையைக் கிளப்பிய திமுக வேட்பாளர்!

பயங்கர தீ விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சாவு!

'மஞ்சுமெல் பாய்ஸ்’ நடிகரை கரம் பிடிக்கும் அபர்ணா தாஸ்... ரசிகர்கள் வாழ்த்து!

ரயிலில் திடீரென ஸ்பைடர் மேனாக மாறிய வாலிபர்... வைரலாகும் அசத்தல் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in