இஸ்ரேல் போர் எதிரொலி... பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!

பெட்ரோல் பங்க்
பெட்ரோல் பங்க்

கடந்த 500 நாட்களாக எந்தவிதமான மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வரும் பெட்ரோல், டீசல் விலை, இஸ்ரேல் போர் காரணமாக உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலில் நடைபெறும் போர்
இஸ்ரேலில் நடைபெறும் போர்

இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை அதிகரித்துள்ளது கடந்த அக்டோபர் 6-ம் தேதி ஒரு பீப்பாய்க்கு ரூபாய் 84.58 ஆக இருந்த நிலையில் தற்போது ஒரு பீப்பாய் ஐந்து சதவீதம் விலை உயர்ந்து 89 டாலராக உள்ளது.

இதன் காரணமாக 500 நாட்களுக்கு மேல் மாற்றம் என்று விற்பனை செய்யப்பட்டு வரும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றும் இதே விலையில்தான் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in