`இதுதான் திமுகவின் சமூகநீதியா?'- பெரியார் பல்கலை தேர்வு வினாத்தாளில் ஜாதி குறித்த கேள்வியால் பொங்கிய ஈபிஎஸ்

`இதுதான் திமுகவின் சமூகநீதியா?'- பெரியார் பல்கலை தேர்வு வினாத்தாளில் ஜாதி குறித்த கேள்வியால் பொங்கிய ஈபிஎஸ்

"ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை ஊக்குவித்து சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வினாத்தாளில் கேள்விகள் கேட்டிருப்பதுதான் விடியா அரசின் திராவிட மாடலா? இதுதான் திமுகவின் சமூகநீதியா?" என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொந்தளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள தாழ்ந்த ஜாதி எது? என்று சேலம் பெரியார் பல்கலைக்கழக முதுகலை எம்.ஏ வரலாறு 2-வது செமஸ்டர் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், கேள்வி குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மறு தேர்வு குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் வெளிக்கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்கள் மூலம் வினாத்தாள்கள் தயாரிக்கப்படுகிறது என்றும் கசிந்துவிடும் என்பதால் முன்கூட்டியே வினாத்தாள்களை படிப்பதில்லை என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், பெரியார் பல்கலைக்கழக தேர்வு வினாத்தாளில் ஜாதி குறித்த கேள்விக்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "மக்களே பாரீர், 'பெரியாரின்' பெயரை தாங்கி நிற்கும் பல்கலைக்கழகத்திலேயே மாணவர்களிடத்தில், பெரியாரின் கொள்கைகளை கொச்சைப்படுத்தியும், சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஊக்குவித்தும் செமஸ்டர் தேர்வு வினாத்தாளில் கேள்விகள் கேட்டிருப்பதுதான் விடியா அரசின் திராவிட மாடலா? இதுதான் திமுகவின் சமூகநீதியா?" என்று கொந்தளித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in