ஓபிஎஸ்ஸை ஓரங்கட்டத் திட்டமா?: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஓப்பன் டாக்

ஓபிஎஸ்ஸை ஓரங்கட்டத் திட்டமா?: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஓப்பன் டாக்

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்ஸை ஓரம்கட்டத் திட்டமா? என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுகவில் ஒற்றைத் தலைமை அவசியம் என்பதே தொண்டர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் எண்ணமாக உள்ளது. ஒற்றைத் தலைமை என்பது காலத்தின் கட்டாயம். ஒற்றைத் தலைமை குறித்து பொதுக்குழுவே முடிவு எடுக்கும். அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி வரும் 23-ம் தேதி நடைபெறும். ஓபிஎஸ், ஈபிஎஸ் எனது வீட்டுக்கு வந்தால் பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துவிடலாம்.

ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டும் எண்ணம் இல்லை. சசிகலாவுக்கும், அதிமுகவுக்கும் சம்பந்தம் இல்லை. அவரைபோல ஓ.பி.எஸ்ஸுக்கும் நடக்கும் என கூறுவது தவறு. ஒற்றைத் தலைமை வேண்டும் என்றுதான் சொல்கிறோம். யார் என்று கூறவில்லை. ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. பொதுக்குழுவில் சுமுகமான முடிவு எட்டப்படும். நான் பன்னீர்செல்வம் பக்கமும் இல்லை; பழனிசாமி பக்கமும் இல்லை" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in