தமிழகம் வந்த பிரதமருக்கு பாதுகாப்பு குறைபாடா?- அண்ணாமலைக்கு டிஜிபி அதிரடி பதில்

தமிழகம் வந்த பிரதமருக்கு பாதுகாப்பு குறைபாடா?- அண்ணாமலைக்கு டிஜிபி அதிரடி பதில்

தமிழ்நாடு வந்த பிரதமருக்கு பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு டிஜிபி சைலேந்திர பாபு அதிரடியாக பதில் அளித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, "ஆன்லைன் மூலம் மோசடி செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மோசடி செய்பவர்கள் வெளிநாட்டில் கூட இருப்பார்கள். நம்முடைய பணம் உங்களது வங்கிக் கணக்கில் இருந்து போன உடனே வேறு ஒருவருடைய கணக்குக்கு போய் வெளிநாட்டுக்கு சென்று விடும். ஒருவேளை ஏமாற்றப்பட்டால் 1930 நம்பரில் புகார் கொடக்கலாம். இந்த நம்பர் ஞாபகம் இல்லை என்றால் தமிழக அரசால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள காவல் உதவி செயலியை உங்கள் மொபைல் போனில் டவுன்லோடு செய்து வைத்து உங்கள் பணம் மோசடி செய்யப்பட்டவுடன் உடனடியாக தகவல் தெரிவிக்கவும். அப்படி தெரிவிக்கும் பட்சத்தில் உங்கள் பணம் சம்பந்தப்பட்ட மோசடி செய்யும் வங்கிக் கணக்குக்கு செல்லாமல் தடுத்து நிறுத்தப்படும்" என்றார்.

பிரதமர் தமிழகம் வந்தபோது பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருக்கிறாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த டிஜிபி சைலேந்திரபாபு, "தமிழகத்திற்கு பிரதமர் வருகை தந்த போது எந்த விதமான பாதுகாப்பு குறைபாடு நடந்ததாக எந்த விதமான தகவலும் இல்லை. நல்ல முறையில் பிரதமருக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. அது தொடர்பாக எந்த குற்றச்சாட்டும் கிடையாது" என்றார்.

தமிழக காவல்துறையில் பயன்படுத்தப்படும் கருவிகள் காலாவதியாகவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து பதில் அளித்த டிஜிபி, ஒவ்வொரு ஆண்டும் காவல்துறையினர் பயன்படுத்தக்கூடிய அனைத்து உபகரணங்களும் சோதனை செய்யப்பட்டு அதில் சில உபகரணங்கள் காலாவதி ஆகிவிட்டால் அதை மாற்றி உடனடியாக புதிய உபகரணங்கள் வாங்க ஏற்பாடு செய்யப்படும். இந்த பரிசோதனை பல நூறு வருடங்களுக்கு மேலாக இருந்து வருகிறது. நல்ல தரமான உபகரணங்கள் தமிழ்நாட்டில் மட்டும் தான் இருக்கிறது. இப்போது கூட நமது அதிகாரிகள் உபகரணங்களுடன் அந்தமானுக்கு சென்று இருக்கிறார்கள். அண்டை மாநிலத்திற்கு நாம் உபகரணங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அதில் எந்த குறைபாடும் இல்லை. பழைய உபகரணங்களை மாற்றி புதிய உபகரணங்கள் வாங்குவது வழக்கமான செயல் தான்" என்றார்.

என்ஐஏ அதிகாரிகள் உங்களுடன் ஆலோசனை நடத்திருக்கிறார்கள். கோவை குண்டுவெடிப்பு சம்பந்தமாக ஏதாவது பேசினார்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த டிஜிபி, ஏற்கெனவே தமிழகத்தில் 15 வழக்குகள் என்ஐஏ இடம் இருக்கின்றன. அது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் உதவி செய்வதற்கான தகவல் பரிமாற்றம் செய்வது குறித்து பேசப்பட்டது. என்ஐஏ அதிகாரிகள் அனைவரும் வந்திருந்தார்கள். இந்த வழக்கை பார்த்துக் கொண்டிருக்கின்ற தமிழக காவல்துறை அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர். அவர்கள் தங்கள் தகவல்களை அவரிடம் பகிர்ந்து கொண்டனர்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in