ராகுல் காந்தி அணிந்திருக்கும் டி ஷர்ட் விலை ரூ.41 ஆயிரமா? - பற்றவைத்தது பாஜக!

ராகுல் காந்தி அணிந்திருக்கும் டி ஷர்ட் விலை ரூ.41 ஆயிரமா? - பற்றவைத்தது பாஜக!

காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி அணிந்திருக்கும் டி ஷர்ட்டின் விலை ரூ.41 ஆயிரம் என பாஜக விமர்சனம் செய்துள்ளது.

கன்னியாகுமரியில் இருந்து தனது ஒற்றுமைப் பயணத்தை தொடங்கியுள்ளார் ராகுல் காந்தி. இந்த நடைபயணத்தின்போது பாஜகவை அவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். மேலும் தேசத்தின் ஒற்றுமை குறித்தும் பல கருத்துகளை முன்வைத்து வருகிறார். இந்த நிலையில்தான் பாஜக, ராகுல் காந்தி மீதான விமர்சனத்தை தொடங்கியுள்ளது.

இன்று பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தியின் புகைப்படத்துடன் பர்பெரி எடீ கோர் போலோ என்ற டி ஷர்ட்டின் படத்தை இணைத்துள்ளது. இந்த டி ஷர்ட் படத்தில் ரூ.41,257 என விலை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவில் ‘பாரதமே பார்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பதிவினை பாஜகவினர் வேகமாக பகிர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமைப் பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. 150 நாட்களில், 3,500 கிலோமீட்டர் தூரம் நடைப் பயணம் செல்வதற்கு திட்டமிட்டுள்ளார். இந்த பயணத்தின்போது அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள், விவசாயிகள் உட்பட பலரையும் சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in