கலைஞரின் பேனா நினைவுச் சின்னம் சுற்றுச்சுழலுக்கு பாதிப்பா?- தமிழக பொதுப்பணித்துறை விளக்கம்

கலைஞரின் பேனா நினைவுச் சின்னம்
கலைஞரின் பேனா நினைவுச் சின்னம்கலைஞரின் பேனா நினைவுச் சின்னம் சுற்றுச்சுழலுக்கு பாதிப்பா?- தமிழக பொதுப்பணித்துறை விளக்கம்

"கலைஞரின் பேனா நினைவுச் சின்னம் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் ஆழிப்பேரலை, புயல், நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர்களை முன்னறிவதற்கான உரிய கருவிகளுடன் அமையவுள்ளது" என்று தமிழக பொதுப்பணித்துறை விளக்கம் அளித்துள்ளது.

கலைஞரின் பேனா நினைவுச் சின்னம்
கலைஞரின் பேனா நினைவுச் சின்னம்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இலக்கிய பணிகளை போற்றும் வகையில் மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்திற்கு அருகே கடலில் 81 கோடியில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் பேனா சிலை வைக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. இந்த சிலை அமைந்துள்ள பகுதிக்கு செல்ல கடற்கரையில் இருந்து சுமார் 650 மீட்டர் நீளத்துக்கு கண்ணாடியிலான மேம்பாலமும் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த பாலம் நிலத்தின் மீது 290 மீட்டரும், கடலின் மீது 360 மீட்டர் அமையும் வகையில் கட்டப்படுகிறது. இந்த பேனா சிலைக்கு ‘கலைஞர் பேனா நினைவுச் சின்னம்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இதனிடையே, பொதுப்பணித்துறை சார்பில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, எதிர்ப்பும், ஆதரவும் எழுந்தது.

இந்த நிலையில், முன்னாள் முதல்வர் கலைஞரின் பேனா நினைவுச் சின்னம் எங்கு எப்படி அமைக்கப்பட உள்ளது? என்ற கேள்விக்கு பொதுப்பணித்துறை விளக்கம் அளித்துள்ளது. "முன்னாள் முதல்வர் கலைஞரின் பேனா நினைவுச் சின்னம் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் ஆழிப்பேரலை, புயல், நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர்களை முன்னறிவதற்கான உரிய கருவிகளுடன் அமையவுள்ளது. மும்பையில் அமைக்கப்பட்டு வரும் சத்ரபதி சிவாஜி திருவுருவச்சிலை கட்டமைப்பை முன்னுதாரணமாக வைத்து அமைக்கப்படவுள்ளது" என்று பொதுப்பணித்துறை பதில் அளித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in