கோத்தபய ராஜபக்சவை இலங்கை வர விடாமல் முட்டுக்கட்டைப் போடுகிறாரா ரணில்?

கோத்தபய ராஜபக்சவை இலங்கை வர விடாமல் முட்டுக்கட்டைப் போடுகிறாரா ரணில்?

சிங்கப்பூர் விசா முடிந்து இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவை, இன்னும் அதற்கான நேரம் அமையவில்லை எனக்கூறி தற்காலிகமாக தாய்லாந்துக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கே அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான கோத்தபய ராஜபக்சவிற்கு எதிராக நடந்த மக்கள் போராட்டத்தால் அவர் மாலத்தீவு தப்பிச்சென்றார். அங்கிருந்து சிங்கப்பூர் சென்றுள்ளார். விசா காலம் அங்கு முடிவடைவதால் ஆக.24-ம் தேதி கோத்தபய ராஜபக்ச இலங்கை திரும்புவார் என்று அவரது உறவினர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அவரை இலங்கைத் திரும்ப வேண்டாம் என அதிபர் ரணில் விக்ரமசிங்கே தாய்லாந்துக்கு அனுப்பியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. கோத்தபய ராஜபக்வை வரவேற்க விமான நிலையத்தை தயார்படுத்துவது குறித்து புலனாய்வு அமைப்புகள் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் தான் இந்த முடிவை அதிபர் எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாக கோத்தபய ராஜபக்சவை நியமிக்க முடிந்தால், அவர் அமெரிக்க செல்ல முடியம் என்ற மாற்று ஆலோசனையை ரணில் விக்ரமசிங்கே வழங்கியுள்ளார். ஆனால், அந்தப் பதவியில் கோத்தபயவால் நியமிக்கப்பட்ட நண்பர் ஒருவர் உள்ளார். அவர் பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி நீங்களே சொல்லுங்க என்று கோத்தபயவிடம் ரணில் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அமெரிக்காவில் உள்ள அந்த நண்பரிடம் கேட்ட போது, கோத்தபய ராஜபக்சவின் கோரிக்கையை அவர் நிராகரித்துள்ளதாக தெரிகிறது.

ஆனால், கோத்தபய ராஜபக்சவை அமெரிக்காவிற்கு அனுப்பும் உண்மையான எண்ணம் இருந்தால், அதிபருக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி இலங்கையின் தற்போதைய பிரதிநிதியை நீக்கி விட்டு அந்த இடத்தில் கோத்தாவை ரணில் நியமிக்கலாம். ஆனால், அதை அவர் செய்யத் தயங்குவதாக கோத்தபய ராஜபக்சவின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதன் காரணமாக கோத்தபய ராஜபக்ச இலங்கை திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in