சினிமா கம்பெனி ஆரம்பிக்கப் போகிறாரா ஓபிஎஸ்?

ஓபிஎஸ் உடன் ராமராஜன், நடிகர் தியாகு
ஓபிஎஸ் உடன் ராமராஜன், நடிகர் தியாகு

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் ஈபிஎஸ் பக்கமே இருப்பதால் கட்சி ஈபிஎஸ்சுக்கே சாதகமாக இருக்கிறது. அதைத் தகர்க்க ஆள்பிடிப்பு வேலைகளை அதிவேகமாகச் செய்து வருகிறது ஓபிஎஸ் தரப்பு. தினகரன் சிபாரிசில், உசிலம்பட்டி எம்எல்ஏ-வான ஐயப்பன் அதிரடியாக ஆதரவாளர்களுடன் வந்து ஓபிஎஸ்சை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இவரைத் தொடர்ந்து இயக்குநர் பாக்யராஜ் தாமாக முன்வந்து ஓபிஎஸ்சுக்கு ஆதரவு தெரிவித்து, “அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். அதற்காக, தேவைப்பட்டால் ஈபிஎஸ்சையும் சந்திக்கத் தயாராய் இருக்கிறேன்” என்று அறிக்கை வாசித்தார். இவரைத் தொடர்ந்து ராமராஜன், தியாகு, அஜய் ரத்தினம் என சினிமா பிரபலங்கள் பலரும் ஓபிஎஸ்சுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதையெல்லாம் ஓபிஎஸ் தரப்பில் பரப்புகிறார்களோ இல்லையோ ஈபிஎஸ் தரப்பில் சுடச் சுடப் பரப்புகிறார்கள். அதுவும் சும்மா பரப்பவில்லை... ’ஐயா ஓபிஎஸ் சினிமா கம்பெனி ஏதும் தொடங்கப் போகிறாரா?’ என்ற கிண்டல் வாசகத்துடன் பரப்புகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in