நான் அதிமுகவில் இணைகிறேனா? - சுப்புலட்சுமி ஜெகதீசன் எடுத்த அதிரடி முடிவு!

சுப்புலட்சுமி ஜெகதீசன்
சுப்புலட்சுமி ஜெகதீசன்

அதிமுகவில் சேரமாட்டேன் என திமுகவிலிருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்

திமுகவின் துணைப்பொதுச்செயலாளராக இருந்த அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது பதவியை சில நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார். இந்த நிலையில் அவர் இன்று மாலை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்த தகவல்களை திட்டவட்டமாக மறுத்துள்ள சுப்புலட்சுமி ஜெகதீசன், “ திமுகவிலிருந்து விலகிய பின்னர் நான் இணைவதற்கு தகுதியான அரசியல் கட்சிகள் தமிழகத்தில் கிடையாது. வேண்டுமானால் நான் திராவிடர் கழகத்தில் இணையலாம். ஆனால் திமுகவிலிருந்து விலகி இங்கே இணைகிறாரே, மு.க.ஸ்டாலின் ஏதேனும் நினைப்பாரோ என, கி.வீரமணிக்கு கொஞ்சம் நெருடலாக இருக்கும் எனவே அதுவும் வேண்டாம். அரசியலுக்கு அப்பாற்பட்டு பல அமைப்புகள் மக்களுக்காக பாடுபடுகின்றன. எனக்கு என்று சில எதிர்கால திட்டங்கள் உள்ளது. பாஜக மக்களை தவறான பாதைக்கு அழைத்து செல்கிறது.அதன் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்ட நான் சுதந்திரமாக பாஜகவை கடுமையாக விமர்சிக்கும் மனநிலையில் உள்ளேன். ஒரு அரசியல் கட்சியில் இருந்துகொண்டு நினைப்பதையெல்லாம் வெளிப்படையாக சொல்ல முடியாது. இனி பொதுவெளியில் இயங்குவேன்” என தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in