இந்திய அரசியல் குறித்து ஒரே மேடையில் என்னுடன் விவாதிக்க ஈபிஎஸ் தயாரா?: சவால் விடும் வைத்திலிங்கம்!

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்இந்திய அரசியல் குறித்து ஒரே மேடையில் என்னுடன் விவாதிக்க ஈபிஎஸ் தயாரா?: சவால் விடும் வைத்திலிங்கம்!

எடப்பாடி பழனிசாமி எனக்கு ஜூனியர். அவருக்குத் திராவிட வரலாறு தெரியாது. அதிமுக வரலாறு தெரியாது. ஓரே மேடையில் தமிழ்நாடு, இந்திய, உலக அரசியல் பற்றி விவாதிக்க எடப்பாடி பழனிசாமி தயாரா என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் சவால் விட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆதரவாளரும், ஒரத்தநாடு சட்டமன்ற அதிமுக உறுப்பினருமான வைத்திலிங்கம் மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘’அமமுகவும், அதிமுகவும் இணைந்து செயல்படும் என ஓபிஎஸ் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியிருக்கிறார்கள். அதன்படி மன்னார்குடி வந்த எனக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

கட்சியின் சீனியாரிட்டி அடிப்படையில் பார்த்தால் ஈபிஎஸ் எனக்கு ஜூனியர். எடப்பாடி தொகுதியில் 1984-ல் ஜனதா தளத்திற்காக வேலை பார்த்தவர். 1986-ல் ஊராட்சி மன்றத்தலைவர் தேர்தலுக்கு நின்று தோல்வியடைந்தவர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் நான் தஞ்சை மாவட்டத்திற்காக கேட்ட அனைத்து வளர்ச்சி திட்டங்களும் அதாவது கால்நடை மருத்துவக்கல்லூரி, விவசாய கல்லூரி, பொறியியல் கல்லூரி என அனைத்திற்கும் முன்னுரிமை அளித்து செயல்படுத்தி தந்தார். இப்படி எதாவது தனது தொகுதிக்கு ஈபிஎஸ் செய்துள்ளாரா?

எடப்பாடி பழனிசாமிக்கு திராவிட வரலாறு தெரியாது, அண்ணா திமுக வரலாறு தெரியாது. ஓரே மேடையில் தமிழ்நாடு, இந்திய, உலக அரசியல் பற்றி விவாதிக்க எடப்பாடி பழனிசாமி தயாரா?

எடப்பாடி பழனிசாமி ரகசியமாக சபரீசனிடம் பேசி வருகிறார். இது அவரது மனசாட்சிக்கு தெரியும். நாங்கள் தான் உண்மையான அதிமுக என செயல்பட்டு வருகிறோம். நீதிமன்ற தீர்ப்பு வரும் ஜூன் மாதம் வரும். அந்த தீர்ப்பின் நிலைமைக்கு ஏற்ப எங்களது முடிவு அமையும். அதிமுகவே நாங்கள்தான், எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து அதிமுகவை ஒருங்கிணைப்போம்.

தற்போதைய சபாநாயகர் அப்பாவு விஜிலென்ஸில் அளித்த புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ராதாபுரம் தொகுதியில் கடற்கடை கிராமத்தில் மீன் வளத்துறை மூலம் பணி மேற்கொண்டதில் பல கோடி ரூபாய் அரசை ஏமாற்றி பெரும் ஊழல் செய்து உள்ளது குறித்தும், வாக்கிடாக்கியில் ரூ.12 கோடி ஊழல் குறித்து முதல் தகவல் அறிக்கை போடப்பட்டுள்ளது, ஊழலைப் பற்றி ஜெயக்குமார் பேசுவதற்கு எந்தவித தகுதியும் இல்லை. அவர் ஒரு கோமாளி. அவர் 3 ஆண்டுக்குள் ராஜ்யசபா சீட் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் பேசிவருகிறார். அவர் இனி சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற முடியாது. அவருக்கு அரசியல் எதிர்காலம் இனி கிடையாது.

நாங்கள் இணைந்து செயல்படுவோம் என அறிவித்திருப்பதை அடுத்து 95 சதவீத அதிமுக தொண்டர்கள் அதனை வரவேற்று எங்கள் பக்கம் வந்துகொண்டிருக்கிறார்கள். எடப்பாடி அணியினர் காசு கொடுத்து எங்களிடம் உள்ள ஒருசிலரை அழைத்து கொண்டிருப்பதால் எங்களுக்கு எந்த இழப்பும் இல்லை.

ஓபிஎஸ் விரைவில் சின்னம்மவைச் சந்திப்பார். முன்னாள் அமைச்சர் காமராஜ் எடப்பாடிக்கு ஆதரவாக கூட்டம் போட்டுள்ளார். அவர் அவரது சொந்த ஊரான மன்னார்குடி தொகுதியில் தேர்தலில் நின்று வெற்றி பெற சொல்லுங்கள். டெபாசிட் கூட மன்னார்குடி தொகுதியில் வாங்க முடியாது.

அதிமுக ஒன்றுபடவேண்டும், மீண்டும் தலைவர் ஆட்சி, அம்மாவின் ஆட்சி மலரவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அனைவரும் ஒன்றுபட வேண்டும். ஆனால் எடப்பாடி பழனிசாமி கட்சி அழிந்தாலும் பரவாயில்லை, தான் தலைமையில் இருக்க வேண்டும் என நினைக்கிறார்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in