கூட்டணி இல்லாமல் திமுக போட்டியிட தயாரா?: ஸ்டாலினுக்கு சவால் விடும் அண்ணாமலை

கூட்டணி இல்லாமல் திமுக போட்டியிட தயாரா?: ஸ்டாலினுக்கு சவால் விடும் அண்ணாமலை

கூட்டணி இல்லாமல் போட்டியிட திமுக தயாரா என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலினுக்குக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு பேட்டியில் “அதிமுகவை பாஜக பயமுறுத்தி குளிர்காய்கிறது. பாஜகவால் தமிழ்நாட்டில் கூட்டணி இல்லாமல் சொந்தக்காலில் நின்று ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது.” என்று கூறியிருந்தார். இதற்குப் பதில் அளிக்கும் வலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், “1967-ம் ஆண்டு, திமுக முதன்முறையாக ஆட்சிக்கு வந்தது அதன் சொந்தப் பலத்தில் அல்ல. சுதந்திரா கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகளுடனான கூட்டணியின் காரணமாகத்தான் திமுக ஆட்சிக்கு வந்தது.

2021-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் அதன் தனிபலத்தால் அல்ல. 12 கட்சிகளுடன் கூட்டணி வைத்ததால் மட்டுமே. திமுக ஒரு தேர்தலில் கூடத் தனித்துப் போட்டியிட்டதில்லை. தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காகப் பல கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தே போட்டியிட்டிருக்கிறது. அப்படியும் நீங்கள் மோசமான தோல்வியைச் சந்தித்த தேர்தல்களும் உண்டு. எதார்த்தத்தை எதிர்கொள்ளுங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். துணைப்பிரதமராகும் உங்களின் லட்சியம் கலைந்து போய் நெடுங்காலமாகி விட்டது. பிரதமர் மோடி தலைமையில் 2024-ம் ஆண்டு தேர்தலிலும் பாஜக மாபெரும் வெற்றியைப் பெறும். கடந்த காலங்களில் தமிழக பாஜக தனித்துப் போட்டியிட்டதுண்டு. இனிவரும் காலங்களில் அதை மீண்டும் செய்யத் தயங்காது. நான் உங்களுக்குச் சவால் விடுகிறேன். கூட்டணி இல்லாமல் போட்டியிட திமுக தயாரா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in