திமுகவினர் சுவர் விளம்பரம்: சென்டிமென்டை உடைக்க ராமேஸ்வரம் வருகிறாரா முதல்வர் ஸ்டாலின்?

முதல்வர் ஸ்டாலின் வருகை
முதல்வர் ஸ்டாலின் வருகை ராமேஸ்வரம் திமுக விளம்பரம்
Updated on
1 min read

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை வரவேற்று ராமேஸ்வரம் நகர் முழுவதும் திமுகவினர் செய்துள்ள சுவர் விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள ஆன்மிக சுற்றுலா தலங்கள் பட்டியலில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பிரதானமாக இடம் பெற்றுள்ளது. தை, ஆடி, மஹாளய அமாவாசை நாட்கள், மாசி திருவிழாவின் போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் தரிசனத்திற்காக இங்கு வந்து செல்கின்றனர்.

இது மட்டுமின்றி, நாட்டில் உள்ள பிரபலமான செல்வந்தர்கள் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை ராமநாதசுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து துவங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், ஆளுங்கட்சி முக்கிய தலைவர்கள் ராமேஸ்வரம் வருவதெனில் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், ராமேஸ்வரம் வரும் தமிழக முதல்வர் ஸ்டாலினை வரவேற்று நகரின் அனைத்து இடங்களிலும் திமுகவினர் கடந்த சில நாட்களாக சுவர் விளம்பரம் எழுதி வருகின்றனர்.

ஆனால் அதில் தேதி குறிப்பிடப்படவில்லை. ராமநாதபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்க ஜன.24-ல் ராமநாதபுரம் வருவதாகவும், ராமேஸ்வரம் சென்று மீனவர்களை சந்தித்து பேசவுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், கீழடி அருங்காட்சியக பணி நிறைவடையததால், முதல்வர் வருகை தள்ளிப்போனது. பிப்.3-வது வாரத்தில் முதல்வர் ராமேஸ்வரம் வருகை தொடர்பாக தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணி தொடங்கியுள்ளதால் மேலும் அவரது வருகைத் தள்ளிப்போகலாம் என போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 50 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்தபோது எந்த முதல்வரும் ராமேஸ்வரம் வரவில்லை என கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் இந்த சென்டிமென்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகிறாரா அல்லது அவரது வருகை ராமநாதபுரம் மட்டுமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in