கோயம்புத்தூர் தொகுதியில் களமிறங்குகிறாரா அண்ணாமலை? - எல்.முருகன் பரபரப்பு பதில்!

அண்ணாமலை, எல்.முருகன்
அண்ணாமலை, எல்.முருகன்

பாஜக தலைவர் அண்ணாமலை விரும்பி கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டால் நல்லதுதான் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பதில் அளித்துள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக கோவை வந்த மத்திய அமைச்சர் எல்.முருகன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான கட்சி பணிகளை முடுக்கிவிடும் வகையில் தமிழக நாடாளுமன்ற பொறுப்பாளர்கள் கூட்டம் கோவையில் நடந்துள்ளது. அதில் தேர்தலை எப்படி எதிர்கொள்வது மற்றும் தயாரிப்புகள் குறித்து தலைவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். தேர்தலுக்கான கூட்டணியை பொருத்தமட்டில் தேசிய தலைமைதான் அதற்கான முறையான அறிவிப்பை வெளியிடுவார்கள்.

அண்ணாமலை
அண்ணாமலை

பாஜகவோடு எந்தெந்த கட்சிகள் கூட்டணிக்கு வருகிறார்கள் என்பது குறித்தெல்லாம் தேசிய தலைமைதான் அறிவிக்கும். வேட்பாளர்கள், போட்டியிடும் தொகுதிகள் குறித்து தேசிய தலைமையும் நாடாளுமன்ற குழுவும் அறிவிக்கும். பாஜக தலைவர் அண்ணாமலை விரும்பி கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட்டால் நல்லதுதான். அதற்கான வேலைகளை செய்ய தயாராக உள்ளோம்.

2014 ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அமைத்து 19 சதவீதம் வாக்குகளை பெற்றோம். அத்துடன் கன்னியாகுமரி, தருமபுரியில் வென்றோம். எனவே 3ஆவது அணி அல்லது திமுக, அதிமுக அல்லாத மற்ற கட்சிகள் வரவே முடியாது என்பது ஏற்கெனவே பொய்யாகிவிட்டது” என்று கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் எல்.முருகன்
மத்திய அமைச்சர் எல்.முருகன் கோப்பு படம்

கோவை, திருப்பூர் அல்லது கொங்கு மண்டலத்தில் பாஜக பலமாக உள்ள ஒரு மக்களவைத் தொகுதியில் அண்ணாமலை களமிறங்கலாம் என்று சொல்லப்படும் நிலையில், எல்.முருகன் இதுபோன்ற கருத்தினை தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in