`25 ஆயிரம் கொடுக்காத நீயெல்லாம் மாவட்டச் செயலாளரா?’- தமாகா பிரமுகருக்கு அரிவாள் வெட்டு!

`25 ஆயிரம் கொடுக்காத நீயெல்லாம் மாவட்டச் செயலாளரா?’-  தமாகா பிரமுகருக்கு அரிவாள் வெட்டு!

கொளத்தூர் பகுதியில் வேளாங்கண்ணி கோயிலுக்கு நன்கொடை கொடுக்க மறுத்த அரசியல் பிரமுகரை அரிவாளால் வெட்டிய கும்பல் தலைமறைவாகியுள்ளது.

சென்னை, கொளத்தூர் ஹரிதாஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முகுந்தன்(48). தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்து வரும் இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த சிலர் வேளாங்கண்ணி கோயிலுக்கு மாலை போட்டிருப்பதாகவும், நன்கொடையாக 25 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என அவரிடம் வற்புறுத்தி இருக்கிறார்கள். கரோனா காரணமாக தன்னிடம் பணம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து வேளாங்கண்ணி கோயிலுக்குச் சென்ற அவர்கள் நேற்று முன்தினம் வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்நிலையில் கோயிலுக்குப் போட்ட மாலையை வீட்டில் கழற்றி வைத்து விட்டு முகுந்தன் வீட்டிற்குச் சென்று தகராறு செய்துள்ளனர். மேலும் அவரது காரை சேதப்படுத்தினர். 25 ஆயிரம் ரூபாய் கொடுக்க முடியவில்லை. நீயெல்லாம் மாவட்டச் செயலாளரா? என முகுந்தனை முகத்தில் வெட்டினர். இதையடுத்து முகுந்தன் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் அறிந்து வந்த கொளத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இதில் தொடர்புடைய ஐந்து பேரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in