`பரிசீலனையில் இருக்கிறது; முதல்வரிடம் சொல்லுங்கள் என்றார்'- ஆளுநரை சந்தித்த அமைச்சர் ரகுபதி பேட்டி

`பரிசீலனையில் இருக்கிறது; முதல்வரிடம் சொல்லுங்கள் என்றார்'- ஆளுநரை சந்தித்த அமைச்சர் ரகுபதி பேட்டி

ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்டமசோதா என்னுடைய பரிசீலனையில் இருக்கிறது. இதை முதலமைச்சர் இடம் சொல்லுங்கள் என்று ஆளுநர் கூறியதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, "ஆன்லைன் ரம்மி சூதாட்டம் இணையதள விளையாட்டை தடை செய்வதற்காக தமிழக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்திற்கு ஒப்புதல் தருவது பற்றி ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறோம். இன்றைக்கு ஆளுநரிடம் அதைப்பற்றிய விளக்கங்களை கொடுத்திருக்கிறோம். ஆளுநரும் அந்த மசோதா என்னுடைய பரிசீலனையில் இருக்கிறது. இதை முதலமைச்சர் இடம் சொல்லுங்கள். சில சந்தேகங்கள் இருக்கிறது. அதை நான் தெளிவுபடுத்திக் கொண்டு ஒப்புதல் தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

அவசர சட்டத்துக்கும் இந்த சட்டத்துக்கும் வித்தியாசம் கிடையாது. நாங்கள் ஆளுநரிடம் சொல்கிற போது, அவசர சட்டம் இயற்றப்பட்ட போது ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 17. இப்போது அதனுடைய எண்ணிக்கை 25. நேரடியாக விளையாடி இதுவரை தற்கொலை செய்து கொண்டவர்களின் பட்டியல் எங்களிடம் கிடையாது. ஆகவே ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட வேண்டும். குறுகிய காலத்தில் இத்தனை உயிர்களை நாம் இழந்திருக்கிறோம். அதற்காக வல்லுனர் குழு கொடுத்திருக்கிற அறிக்கையையும் ஆளுநரிடம் தெரிவித்திருக்கிறோம். இப்போது 25 உயிர்களை ஆன்லைன் ரம்மியால் தான் இழந்திருக்கிறோம். ஆன்லைன் விளையாடுவதற்கும் நேரடியாக விளையாடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அவர்கள் எப்படி வேண்டுமானாலும் புரோகிராமை செட் பண்ணி கொள்ளையடித்து விடுவார்கள். அதில் மக்களுடைய பணம் பறிபோய் விடுகிறது. ஆன்லைனில் விளையாடுங்கள், உங்களுக்கு 8000 ரூபாய் தந்திருக்கிறோம் என்று சொல்கிறார்கள். அதை நம்பி விளையாட போகிறார்கள். விளையாடப் போனால் அவர்கள் 8 லட்சம் ரூபாயை இழக்கின்றனர். இதனால் அந்த குடும்பமே நிர்க்கதியாக நிற்கிறது.

எனவே இதனை தடை செய்ய வேண்டும். விரைவில் இந்த சட்ட மசோதாவை பரிசீலனை செய்து தர வேண்டும் என்று ஆளுநரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆளுநருக்கு அனுப்பப்பட்ட 21 மசோதாக்கள் நிலுவையில் இருக்கின்றன. குறிப்பிட்ட காலத்திற்குள் ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என்று எந்தவிதமான காலம் நிர்ணயம் இதுவரையும் கிடையாது. எனவே கால நிர்ணயத்தை நிர்ணயிக்கும் படி நாங்கள் கேட்க முடியாது. அரசியல் சட்டத்தில் அதற்கான திருத்தங்கள் கொண்டு வந்தால் அந்த கால நிர்ணயத்தை கேட்கலாம்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in