பாமக பெட்டி வாங்கும் கட்சியா?... அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

பெட்டி வாங்கும் கட்சி என எங்களை அவதூறாக விமர்சிப்பவர்கள் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார். 

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பியின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ்  காஞ்சிபுரம் செவிலிமேட்டில் இருந்து பெங்களூர் மற்றும் வேலூரை இணைக்கும் புறவழிச் சாலையில் வெங்கடாபுரம் நான்கு வழி சந்திப்பில்  7.50 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட புதிய 60 அடி உயர் மின் கோபுர விளக்கினை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று திறந்து வைத்தார்.

மேலும் நூறு அடி உயரமுள்ள கொடிக் கம்பத்தில் பாமக கட்சிக் கொடியினையும் அவர் ஏற்றி வைத்தார். இதன் பின் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். "சமீப நாட்களாக என்னைப் பற்றியும், எங்கள் பாமக கட்சியைப் பற்றியும் சில ஊடகங்களில் ஒரு சிலர் அவதூறு செய்திகளைப் பரப்பி வருகின்றனர். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இத்தோடு நிறுத்திக். கொள்ளுங்கள். 

வேண்டுமென்றே யாருடைய தூண்டுதலின் பேரில் பொய்யான அவதூறான செய்திகள் திட்டமிட்டே பரப்பி வருகிறார்கள். இதனை நிறுத்திக் கொள்ளுங்கள். இல்லையேல் சட்ட ரீதியாக பல வழக்குகள் உங்கள் மீது தொடுக்கப்படும். ஊடகங்களில் ஒரு சிலர் பாமக கட்சி தற்போதைய தேர்தலில் பேரம் பேசுகிறார்கள், பெட்டியை வாங்கி விட்டார்கள் என அவதூறாக, பொய்யாக பேசி வருகிறார்கள். 

அதனை நிறுத்திக்கொள்ளுங்கள். இது அசிங்கமாக உள்ளது. இது உங்களுக்குத்தான் அசிங்கம். ஒரு சில ஊடகத்துறையினர் ஊடகத்துறையை சார்ந்தவர்களா அல்லது அரசியல் இடைத்தரகர்களா என்றளவுக்கு அவர்களின் நடவடிக்கை தரம் தாழ்ந்து இருக்கிறது. 

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

பாமக கட்சி மக்கள் பிரச்சினைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து, நேர்மையாக போராடி வருகிறோம். இது மேலும் தொடர்ந்தால் சட்ட ரீதியாகவும், கிரிமினல் ஆக்‌ஷனையும் நாங்கள் நிச்சயமாக எடுப்போம்.

நல்ல ஒரு ஆரோக்கியமான விவாதங்களை ஊடகங்கள் செய்ய வேண்டும்.  அதற்கு மாறாக பொய்யான அவதூறான செய்திகளைப் பரப்பாதீர்கள்" என அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார். மேலும், மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in