சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி: மீண்டும் விளையாடத் தயாராகும் சென்னை!

சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி: மீண்டும் விளையாடத் தயாராகும் சென்னை!

செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடர்ந்து மீண்டும் சர்வதேச போட்டிக்குச் சென்னை தயாராகி வருவதாக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் விளையாட்டு மைதானத்தில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகள் செப்டம்பர் 12-ம் தேதி முதல் செப்டம்பர் 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மெய்யநாதன், ‘சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டியை, தமிழக அரசு WTO உடன் இணைந்து நடத்த உள்ளது. இதற்காக உலகத் தரத்தில் மைதானத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் சர்வதேச போட்டிக்கு மீண்டும் சென்னை தயாராகி வருகிறது.

செஸ் ஒலிம்பியாட் போல் மக்களிடம் விழிப்புணர்வு மேற்கொள்வதற்காக, தமிழக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகள் செப்டம்பர் 8 முதல் இந்த மைதானத்தில் பயிற்சியைத் தொடங்க உள்ளனர். அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு 500 கோடி செலவு செய்திருப்பார்கள். ஆனால் நாங்கள் மிகவும் குறைத்து 114 கோடியில் போட்டியைச் சிறப்பாக நடத்திக் காட்டி இருக்கிறோம். செஸ் ஒலிம்பியாட் போட்டியின் செலவு கணக்குகளைப் பொதுத்தளத்தில் வைக்கத் தயாராக இருக்கிறேன். யார் வேண்டுமானாலும் வந்து விசாரித்துக் கொள்ளலாம்’ என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in