பாஜகவில் ஓரங்கட்டப்படும் வசுந்தரா ராஜே... தனித்துக் களமிறங்கும் ஆதரவாளர்கள்?

வசுந்தரா ராஜே
வசுந்தரா ராஜே

ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலுக்காக வெளியிடப்பட்டுள்ள முதல்கட்ட பாஜக வேட்பாளர் பட்டியலில் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவின் ஆதரவாளர்களின் பெயர்கள் இடம் பெறாதது அக்கட்சி தலைவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அக்கட்சியில் உட்கட்சி பூசல் தீவிரமடைந்துள்ளது.

ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பர் 23ம் தேதி நடைபெறவுள்ளது, முடிவுகள் டிசம்பர் 3ல் வெளியாகிறது. இந்த சூழலில் ராஜஸ்தான் தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. 41 பேர் கொண்ட இந்த பட்டியலில் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவின் ஆதரவாளர்கள் யாருடைய பெயரும் இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி வசுந்தரா ராஜே
பிரதமர் மோடி வசுந்தரா ராஜே

இது தொடர்பாக ராஜஸ்தான் மாநில முன்னாள் அமைச்சர்கள் சிலர் வசுந்தரா ராஜேவை சந்தித்து பேசினார். அப்போது தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பதாக கட்சி தலைமை உறுதி அளித்ததன் பேரில் பரப்புரையை தொடங்கிவிட்ட நிலையில் வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர் இந்நிலையில் அதிருப்தியாளர்களை சமாளிப்பதற்காக பாஜகவின் கட்டுப்பாட்டு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒருவேளை அடுத்தகட்ட பட்டியலிலும் வசுந்தராவின் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால், பலர் சுயேட்சையாக போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in