'காங்கிரஸை சபிப்பதற்கு பதிலாக பாஜகவின் தவறான ஆட்சி குறித்து பேசுங்கள்’ - பிரதமர் மோடியை விமர்சிக்கும் கார்கே!

மல்லிகார்ஜூன் கார்கே
மல்லிகார்ஜூன் கார்கே

காங்கிரஸை சபிப்பதற்கு பதிலாக, குஜராத் மாநிலத்தில் நடக்கும் பாஜகவின் தவறான ஆட்சி பற்றி பேச வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று பதிலடி கொடுத்தார்

குடியரசுத் தலைவர் தேர்தலில் பழங்குடியினப் பெண்ணான திரௌபதி முர்முவுக்கு ஆதரவளிக்காததற்காக காங்கிரஸ் கட்சியை, குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி நேற்று கடுமையாக தாக்கினார். மேலும், காங்கிரஸ் கட்சி குஜராத்தில் ஆட்சியில் இருந்தபோது, ​​வாக்கு வங்கி அரசியல், குடும்ப அரசியல், மதவெறி மற்றும் சமூக விரோதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்த விமர்சனம் தொடர்பாக பிரதமருக்கு பதிலடி கொடுத்த மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்ட ட்வீட்டில், "நரேந்திர மோடி ஜி, காங்கிரஸை சபிப்பதற்கு பதிலாக, பாஜகவின் தவறான ஆட்சியைப் பற்றி பேசுங்கள். குஜராத் குழந்தைகளின் எதிர்காலம் ஏன் கெட்டுப்போனது? ஊட்டச்சத்து குறைபாடு, எடை குறைந்த குழந்தைகள் உள்ள 30 மாநிலங்களில் குஜராத் 29வது இடத்தில் இருப்பது ஏன்?. குழந்தை இறப்பு விகிதத்தில் குஜராத் 19வது இடத்தில் இருப்பது ஏன்?" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in