சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்துள்ளன: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்துள்ளன: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழக அரசின் நடவடிக்கையால் சாலை விபத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 2019 விட 2022-ம் ஆண்டு மூன்று சதவீதம் குறைந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மாவட்ட அளவிலான சுகாதார உயர் அதிகாரிகளுக்கான கருத்தரங்கம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது; அனைவருக்கும் நல்வாழ்வு என்பது தொடர்பாக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. தொற்றா நோய்களின் பாதிப்புகளை தடுப்பதற்கும், குறைப்பதற்காகவும் கடத்த ஆண்டு மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் தொடங்கப்பட்டு அந்த திட்டம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தற்போது அந்த திட்டத்தின் மூலம் 1 கோடி பயனாளிகள் 615 கோடியே 68 லட்சம் ரூபாய் செலவில் சிகிச்சை பெற்று இருக்கிறார்கள். இந்தியாவிலேயே அனைவரையும் கவரும் வண்ணம் உள்ள திட்டம் மக்களை தேடி மருத்துவம் மற்றும் இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டம், இந்த திட்டத்தால் 2019-ம் ஆண்டை ஒப்பிடும் போது 2022-ம் ஆண்டு சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் பெருமளவில் குறைந்துள்ளது'' என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in